2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

எயார்டெல் லங்கா mCash உடன் இணைவு

Gavitha   / 2016 ஒக்டோபர் 04 , பி.ப. 09:15 - 1     - {{hitsCtrl.values.hits}}

எயார்டெல் லங்கா, mCash மொபிடெல் சேவையான SLT உடன் பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.“mCash” சேவையின் மூலம் சிக்கனமான, பிரச்சினைகளற்ற விதத்தில், எயார்டெல் பாவனையாளர்கள் தங்களது பிற்கொடுப்பனவு ​அலைபேசி கட்டணங்களை செலுத்தவென அதன் விநியோக வலையமைப்பை மேலும் விஸ்தரிக்கவுள்ளது.   

இப் புதிய சேவை ஆரம்பிக்கப்படுவதன் மூலம் சகல எயார்டெல் லங்கா வாடிக்கையாளர்கள் முற்கொடுப்பனவு Top-up களைச் செய்யும் சந்தர்ப்பத்தைப் பெறுவதோடு, அவர்களின் பிற்கொடுப்பனவு குரல்வழி மற்றும் தரவுக் கட்டணங்களை இலங்கையின் சகல பகுதிகளிலும் 12,000க்கும் அதிகமான நிலையங்களைக் கொண்டுள்ள mCash வலையமைப்பின் மூலம் செலுத்தும் சந்தர்ப்பத்தையும் பெறுவார்கள். இதன் பலனாக எயார்டெல் லங்காவின் விநியோக வலையமைப்பு 60,000 நிலையங்களுக்கு மேல் அதிகரிப்பதனால், நாட்டின் சகல பகுதிகளிலும் எயார்டெல் சேவைகளை வாடிக்கையாளர்கள் இலகுவில் பெறுவதுக்கு வாய்ப்புக்கிடைத்துள்ளது.   

mCash வசதிகளை உபயோகிக்கும் எயார்டெல் வாடிக்கையாளர்கள் எந்தவொரு மொபிடெல் கிளைக்கு அல்லது SLT ரெலிஷொப்கள், சிங்கர் மெகா அல்லது நாட்டின் சகல பகுதிகளிலுமுள்ள எந்தவொரு mCash சில்லறை விற்பனை நிலையங்களுக்குச் செல்வதன் மூலம் தங்களது பிற்கொடுப்பனவு Bill கட்டணங்களைச் செலுத்தும் வசதியையும், முற்கொடுப்பனவு Top-ups களை வாங்கும் வசதியையும் பெறுவார்கள். MCash வசதிகளை உபயோகிக்காத வாடிக்கையாளர்கள், அதே வசதியைப் பெறவென MCash அதன் சேவைகளை MCash அப்பாலும் விஸ்தரித்துள்ளது.    


  Comments - 1

  • p.thesavan Friday, 18 May 2018 02:28 PM

    சிம் தொலைந்துவிட்டது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X