2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

எலிபன்ட் ஹவுஸின் F5 isotonic sports பானம்

A.P.Mathan   / 2015 நவம்பர் 12 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எலிபன்ட் ஹவுஸ் தனது புதிய isotonic sports பானமான F5 ஐ அறிமுகம் செய்துள்ளது. கொழும்பு CR&FC மைதானத்தில் இடம்பெற்ற YES FM ரக்பி உலகக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தின் திரையிடலின் போது இந்த அறிமுகம் இடம்பெற்றிருந்தது.

எலிபன்ட் ஹவுஸ் F5 என்பது, புத்துயிரூட்டும் sports பானமாகும். பயிற்சிகள், விளையாட்டுக்களில் ஈடுபடும் போது இழந்த சக்தியை மீளப் பெற்றுக் கொள்ளும் வகையில் நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட பானமாகும். இதன் மூலம் வீரர்களுக்கு உயர்ந்த வினைத்திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், சிறந்த சுவையையும் அனுபவிக்க முடியும். Isotonic பானங்களின் மூலமாக எந்தவொரு உடற்பயிற்சி மூலமாகவும் வியர்வையினால் உடலிலிருந்து வெளியேறிய திரவங்கள் மற்றும் electrolytes ஆகியவற்றை மீளப் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளது. அளவுக்கதிகமான வியர்வை காரணமாக உடலில் நீர்த்தன்மை குறைவடையும் என்பதால், இது மிகவும் இன்றியமையாத தேவையாக உள்ளது. 

தற்போது சிட்ரஸ் மற்றும் ஒரேன்ஜ் ஆகிய இரு சுவைகளில் 350 மி.லீற்றர் போத்தல்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள எலிபன்ட் ஹவுஸ் F5, நாடு முழுவதும் காணப்படும் தெரிவு செய்யப்பட்ட கீல்ஸ் சுப்பர் உள்ளடங்கலான விற்பனைத்தொடர்கள் மற்றும் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. 

இந்த புதிய எலிபன்ட் ஹவுஸ் F5 அறிமுகம் தொடர்பில் சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் பிஎல்சியின் பானங்கள் பிரிவின் தலைமை அதிகாரியும், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பதில் தலைவருமாகிய தமிந்த கம்லத் கருத்து தெரிவிக்கையில், 'Isotonic பானம் என்பது உடல் ரீதியான செயற்பாடுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. எலிபன்ட் ஹவுஸ் F5 என்பது உடலுக்கு அத்தியாவசியமான திரவங்கள் மற்றும் electrolytes ஆகியவற்றை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. வீரர்களுக்கு தமது செயற்பாட்டின் போது உடலில் போதியளவு திரவத்தன்மையை கொண்டிருக்க உதவியாக அமைந்திருக்கும். முதன் முதலில் கு5 பானத்தை பருக எதிர்பார்ப்போர் குறித்து கவனம் செலுத்த நாம் தீர்மானித்துள்ளோம், இது மிகவும் வியப்பூட்டும் செயற்பாடு என்பதுடன், புதிய தயாரிப்பு எனும் வகையில் விளையாட்டு மற்றும் வேலைப்பழு நிறைந்த வாழ்க்கை முறையை கொண்டவர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X