2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

Gavitha   / 2016 ஒக்டோபர் 04 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகமாக ஜீவனி சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.   

32 வருடங்களுக்கு முன்னர் இவர் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் முகாமைத்துவ பயிலுநராக இணைந்து கொண்டார். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் இவர் பணியாற்றிய அனுபவம், 20 வருடங்களுக்கு மேலான காலப்பகுதியில் தயாரிப்புகள் முகாமைத்துவம் மற்றும் 10 வருடங்களுக்கு அதிகமான காலப்பகுதியில் சந்தை அபிவிருத்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் ஆகியவற்றை இவர் கொண்டுள்ளார்.  

ஆடை ஏற்றுமதி துறையின் தயாரிப்புகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை இவர் கையாண்டிருந்தார். அத்துடன், விவசாய மற்றும் தொழிற்துறை செயற்பாடுகளின் அபிவிருத்தியிலும் இவர் கைகோர்த்திருந்தார்.  
அமெரிக்கா, ஐரோப்பா, தென் ஆபிரிக்கா, ஜப்பான், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஜனாதிபதி வர்த்தக தூதுக்குழு விஜயங்களின் போது ஒரு அங்கத்தவராக கலந்து கொண்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X