2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஐடியல் மோட்டர்ஸ் (தனியார்) நிறுவனத்தின் பணிப்பாளரானார் சமிந்த வனிகரத்ன

Gavitha   / 2016 மே 31 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐடியல் மோட்டர்ஸ் (தனியார்) நிறுவன மோட்டார் வாகனத் துறையின் புதிய பணிப்பாளராக சமிந்த வனிகரத்ன மீண்டும் நிறுவனத்தின் முகாமைத்துவத்துடன் இணைந்துள்ளார். 2010ஆம் ஆண்டிலிருந்து சமிந்;த வனிகரத்ன ஐடியல் மோட்டர்ஸ் தனியார் நிறுவனத்தில் சேவையாற்றியதுடன், அந்நிறுவனத்தின் இந்திய மஹிந்திரா நிறுவனத்துடன் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தது முதல், அதன் விற்பனையின் பின்னரான அலுவல்களுக்கான பொது முகாமையாளராக கடமை புரிந்தார். அக்காலத்தில் ஐடியல் மோட்டர்ஸ் தனியார் நிறுவனத்தின் விற்பனையின் பின்னரான சேவைப் பிரிவினை ஆரம்பித்து வைப்பதில் முன்னின்று சேவையாற்றியதும் இவரே. எமது நாட்டின் கிராமிய பிரிவுகளுக்காக 'கொமன் ரேல் டீசல் தொழில்நுட்பத்தை' (CRDe) அறிமுகப்படுத்துவதிலும் சமிந்த வனிகரத்ன முன்னணியில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், சிலோன் மோட்டார் வாகன சங்கத்துடன் (AA) இணைந்து இலத்திரனியல் மற்றும் இயந்திரவியல் பிரிவுகளின் சேர்க்கையான 'மெகெட்ரொனிக்ஸ்' (Mechatronics) கொள்கையை பிரபல்யமடையச் செய்வதிலும் இவர் முன்னின்று உழைத்தவராவார்.

கண்டி தர்மராஜ கல்லூரியின் பழைய மாணவரான சமிந்த வனிகரத்ன 1996 ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழத்தில் இயந்திரவியல் துறை பொறியியல் பட்டதாரியாக பட்டம் பெற்றதுடன், 2014 ஆம் ஆண்டு அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பவியல் முகாமைத்துவம் பற்றிய வர்த்தக முகாமைத்துவ முதுமானிப் பட்டத்தையும் (MBA) பெற்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X