2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கைகோர்த்துள்ள யமஹா இசை நிலையம் மற்றும் சிங்கர் நிறுவனம்

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் முன்னணி வர்த்தக நாமங்களில் இரண்டான சிங்கர் மற்றும் யமஹா என்பன இலங்கையில் வர்த்தக பிரதிநிதித்துவர்களாக கைகோர்த்துள்ளனர். பல்வேறு வகை இசைக் கருவிகளின் தெரிவுகள் மற்றும் ஹோம் தியேட்டர் சிஸ்டம் (வீட்டுத் திரையறங்க முறை) என்பனவற்றின் விற்பனைக்காகவே இரு பிரதான நிறுவனங்களும் இணைந்துள்ளன.

இந்த மைல்கல் உடன்படிக்கையின் அமுலாக்கம் கொழும்பில் அண்மையில் கண்கவர் இசை நிகழ்வொன்றுடன் தொடக்கி வைக்கப்பட்டது. யமஹா இசை நிலையத்தின் இசை கருவிகளையும் ஹோம் தியேட்டர் சிஸ்டம்களையும் எதிர்வரும் காலங்களில் சிங்கர் மெகா மூலம் பெற்றுக் கொள்ள முடியும். இலங்கையில் கடந்த 93 வருடங்களாக யமஹா வர்த்தக முத்திரைகளை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் யமஹா இசை நிலையம் செயற்பட்டு வருகின்றது.

இதன் தொடராக யமஹா கீபோர்ட்டுகள், கிட்டார்கள், ரெக்கோடர் மற்றும் ஹோம் தியேட்டர் சிஸ்டம்களையும் இலங்கையில் உள்ள 16 சிங்கர் மெகா விற்பனை காட்சியறைகளில் பெற்றுக் கொள்ள முடியும். தரம் வாய்ந்த இசைக் கருவிகளை நாடி நிற்கும் மாணவர்களுக்கும் இசை ஆர்வலர்களுக்கும் இது பெரும் வசதியாக அமையும்.

2015 ஒக்டோபர் 1 வியாழக்கிழமை முதல் இந்த இணைவாக்கம் அமுலுக்கு வந்துள்ளது. சிங்கர் மெகா காட்சியறையில் உள்ள ஊழியர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்க ஜப்பானில் இருந்து இரண்டு யமஹா நிபுணர்களும் இங்கு வருகை தந்திருந்தனர். சிங்கர் காட்சியறைகளில் நிறுவப்பட்டுள்ள யமஹா கூடங்களின் அங்குரார்ப்பண நிகழ்விலும் அவர்கள் பங்கேற்றனர்.

இந்த வைபவத்தில் உரை நிகழ்த்திய சிங்கர் ஸ்ரீலங்காவின் சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தகப் பணிப்பாளர் திரு. மகேஷ் விஜேவர்தன யமஹா போன்ற தரம் வாய்ந்த இசை கருவி விற்பனைகளில் பங்காளியாக இணைந்து கொள்கின்றமை குறித்து தனது நிறுவனம் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். அதன் உற்பத்தி தரம் காரணமாக இன்று இலங்கையில் பலராலும் விரும்பப்படும் ஒரு உற்பத்தியாக அது திகழுகின்றது. மக்களின் இந்த விருப்புக்கு யமஹா இசை நிலையத்தின் ஆற்றலும் ஒரு காரணம் என்று அவர் கூறினார்.

யமஹாவின் கல்விசார் தொடர் கீபோர்ட்டுகள், ஒலி சம்பந்தமான கிடார்கள், பிரவேச நிலை சொப்ரானோ ரெகோடர்கள் என்பனவே ஆரம்ப கட்டமாக சிங்கர் காட்சியறைகளில் விற்பனைக்கு வைக்கப்படும். இவை பெரும்பாலும் பாடசாலை மாணவர்களின் தேவையோடு தொடர்புடையவை. அத்தோடு  ஹோம் தியேட்டர் சிஸ்டம்களையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம்.

'சிங்கர் ஸ்ரீலங்காவுடனான எமது ஒத்துழைப்பு எமது விற்பனையை கணிசமாக வலுவடையச் செய்யும். உற்பத்தி தரம் மற்றும் தொழில்நுட்பத் தரம் மிக்க யமஹா இசைக் கருவிகள் மற்றும் ஹோம் தியேட்டர் சிஸ்டம் உற்பத்திகளையும் ஆர்வம் மிக்க பெருந் தொகையானவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்' என்று தெரிவித்த யமஹா இசை நிலையத்தின் பணிப்பாளர் திரு. ரஜீவ் கதிரமன்புள்ளே. 'இந்த இணைவாக்கம் எமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது' என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டில் தற்போது உலகத் தரம் வாய்ந்த இசை மற்றும் ஒலி கருவிகள், கலையக ஒலிப்பதிவு கருவிகள் என்பனவற்றை ஒரே கூரையின் கீழ் வழங்கும் தனியொரு நிறுவனமாக யமஹா இசை நிலையம் திகழுகின்றது. யமஹா இசை நிலையம் என்ற பெயரில் 1922ம் ஆண்டு மைக்கல் கதிரமான்புள்ளே யமஹா பியானோக்களை விற்பனை செய்யத் தொடங்கியது முதல் அதன் வரலாறும் தொடங்கியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X