2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

குடும்ப சவாரி 10க்கு இங்கிலாந்துச் சுற்றுலா

Gavitha   / 2016 செப்டெம்பர் 25 , பி.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

Ceylinco Life இன் ‘குடும்ப சவாரித்’ திட்டத்தின் கீழ் 5 காப்புறுதிதாரர்கள் இங்கிலாந்திற்கு, சகல செலவுகளும் வழங்கி அழைத்துச் செல்லப்பட இருக்கிறார்கள். ஆயுட் காப்புறுதி முன்னோடியான Ceylinco Life அதன் குடும்ப சவாரி மெகா ஊக்குவிப்புத் திட்ட வரிசைத் தொடரில் இந்த 10வது சுற்றுலா 2017ஆம் ஆண்டு இடம்பெறுகிறது.   

புதிதாக செல்ல இருக்கும் இடம் குடும்ப சவாரி ஊக்குவிப்புத் திட்டத்தின் அதிஉயர் பரிசாகும் என்று, இலங்கையின் சகல மாவட்ட கிளைத் தலைவர்களின் கொழும்பில் இடம்பெற்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் தெரிவித்த கம்பனி இந்த 10ஆவது குடும்ப சவாரியில் காப்புறுதிதாரர் குடும்பங்களுக்கு டுபாய், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கான விடுமுறை சுற்றுலாவும் Leisure World க்கு ஒரு நாள் விஜயமும் அடங்குகின்றன என்றும் தெரிவித்துள்ளது.   

கடந்த 3 வருடங்களில், குடும்ப சவாரியில் மாபெரும் பரிசுகளை வென்றெடுத்த காப்புறுதிதாரர்களுக்கு ஜப்பான் (2014), சுவிற்ஸர்லாந்து (2015), ஜேர்மனி (2016) ஆகிய நாடுகளுக்கு விடுமுறை சுற்றுலாக்கள் பரிசாக வழங்கப்பட்டன. எல்லாமாக இதுவரை 17,000 பேர் இத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டு சுற்றுலாக்களுக்கு அல்லது Leisure World க்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள்.   

இந்த ஊக்குவிப்புத் திட்டம் நிதி ஈடுபாட்டைப் பொறுத்த மட்டிலும் விநியோக நிருவாகவியலை பொறுத்த மட்டிலும் மிகப்பெரும் பொறுப்பேற்பாகும். ஆனால் இதனை தொடர்ந்து மேற்கொள்வது மட்டுமன்றி காப்புறுதிதாரர்களின் அரிமிதமான பிரதிபலிப்பு காரணமாக ஒவ்வொரு வருடமும் அதன் வாய்ப்பெல்லையை விஸ்தரிப்பதே நோக்கமாகும் என்று Ceylinco Life பிரதம நிறைவேற்றதிகாரி ரி. ரணசிங்க தெரிவித்தார்.   

பெரும் தொகையான காப்புறுதிதாரர்கள் இதனால் அனுகூலம் பெற்றது மட்டுமல்லாமல் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இதில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள் என்பதும் நாட்டின் சகல பகுதிகளையும் சேர்ந்த மக்களுக்கிடையே பரஸ்பர தொடர்புகளும் ஏற்படுகின்றன என்பதும் இதன் பிரதான அனுகூலமாகும் என்றும் திரு. ரணசிங்க மேலும் கூறினார்.   

Ceylinco Life இன் குடும்ப சவாரி 10 இன் கீழான இரண்டாவது பரிசு 10 காப்புறுதி- தாரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் டுபாய்க்கான சுற்றுலாவாகும். மேலும் 50 காப்புறுதிதாரர்கள் அவர்களது குடும்பத்தினருடன் சிங்கப்பூருக்கான சுற்றுலாவுக்கு தெரிவு செய்யப்பட இருக்கிறார்கள். மற்றும் 500 குடும்பங்கள் Leisure World பூங்காவிற்கு முழு நாள் விஜயமாக அழைத்துச் செல்லப்படுவார்கள்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X