2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கொமர்ஷல் வங்கி ATM நடவடிக்கைகள் டிசெம்பரில் சாதனை

Gavitha   / 2016 ஜனவரி 17 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கியின் ATM இயந்திரங்களில் டிசெம்பர் மாதம் முழுவதும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 215,548 பண மீளப்பெறுகைகள் நடைபெற்றுள்ளன. கொமர்ஷல் வங்கி ATM இயந்திரங்களில் மொத்தம் 6,682 மில்லியன் பண மீளப்பெறல்கள் நடைபெற்றிருந்ததுடன், மொத்தமாக 37.321 பில். ரூபாய் மீளப்பெறப்பட்டிருந்தது.

618 ATM நிலையங்களைக் கொண்ட கொமர்ஷல் வங்கி வலையமைப்பில் டிசெம்பர் 23 ஆம் திகதியன்று ரூ. 1,976.8 மீள்பெறுகை செய்யப்பட்டிருந்தது. டிசம்பர் மாதத்தின் 24 நாட்களிலும் நாள் ஒன்றுக்கு ஒரு பில்லியன் ரூபாய் வீதமும் ஐந்து நாட்களில் நாள் ஒன்றுக்கு 1.5 பில்லியன் ரூபாய் வீதமும் மீள்பெறுகைகள் நடைபெற்றுள்ளதாகவும் வங்கி அறிவித்துள்ளது.

டிசம்பர் 2015 இன் மீளப்பெறல்கள் 2014 டிசெம்பர் மாத மீளப் பெறல்களுடன் ஒப்பிடுகையில் 4,160 மில்லியன் ரூபாயாக பதிவாகி, 12.5 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. டிசெம்பர் 23 இல் மொத்தம் 407,000 பண மீளப்பெறுகைகளும், டிசெம்பர் 31 இல் 411,000 மீளப்பெறல்களும் நடைப்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டின் சிங்கள தமிழ் புதுவருடத்துக்கு முந்திய ஏப்ரல் 10 ஆம் திகதி ரூபா 2.49 பில்லியன் மீளப் பெறப்பட்டிருந்தது.

இலங்கையில் காணப்படும் தனியார் வங்கிகளில் அதிகளவு ATM நிலையங்கள் கொமர்ஷல் வங்கி வசம் உள்ளன. கொமர்ஷல் வங்கியின் பொருட்கள் கொள்வனவு வசதியுடன் கூடிய ATM கார்ட் ஒன்றின் மூலம் ஒரு தடவையில் 40,000 ரூபாயை மீளப் பெறமுடியும். இதேவேளை வங்கியுடனான முன்னேற்பாட்டின் பிரகாரம் ஒரு கார்ட் மூலம் நாள் ஒன்றில் 100,000 ரூபாய் வரை மீள பெறும் சாத்தியம் உண்டு.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X