2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கொமர்ஷல் வங்கியின் உலக சிறுவர் தின கொண்டாட்டம்

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 16 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கி இம்முறை உலக சிறுவர் தினத்தை ITN நிறுவனத்துடன் இணைந்து கொண்டாடியது. சிறுவர்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியையும் விநோதத்தையும் அளிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. இதற்கென இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஹங்வெல்லயில் உள்ள லெஷர் வேர்ல்ட் பூங்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 

சிறுவர்களுக்கான கொமர்ஷல் வங்கியின் விஷேட கணக்குத் திட்டமான அருணலு இதற்கான ஆதரவை வழங்கியிருந்தது. இந்த விஷேட அருணலு அனுசரனையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஓவியப் போட்டி கணை எறிதல் போட்டி உட்பட இன்னும் பல விளையாட்டுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவற்றில் பங்கேற்ற சிறுவர்கள் அனைவருக்கும் அருணலு முத்திரை பொதிக்கப்பட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன.

அருணலு தொடர்ச்சியாக கல்விக்கு ஊக்கமளித்து வருவதோடு சிறுவர்கள் மத்தியிலுள்ள ஏனைய ஆற்றல்களை கட்டியெழுப்பவும் ஆதரவளித்து வருகின்றது. இந்த வகையில் சிறுவர் தின நிகழ்வில் பாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பத்தாயிரம் ரூபா பணப் பரிசிலும் வழங்கப்பட்டது. இவற்றுக்கு மேலதிகமாக தமது திறமைகளை வெளிப்படுத்திய 7 சிறுவர்களுக்கு ஆரம்ப வைபவத்தின் போது பெறுமதி மிக்க கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. விஷேட கண்டுபிடிப்புக்கள் வீரதீர செயற்பாடுகள் சமூகத்திற்கான விஷேட பங்களிப்புக்கள் என்பனவற்றுக்காகவே இந்தப் பரிசுகள் வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்வின் போது கொமர்ஷல் வங்கியின் மகளிருக்கான பிரத்தியேக கணக்குத் திட்டமான அணகி ஊடாக சிறுவர்களின் தாய்மாருக்கென விஷேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இவற்றில் பங்கேற்ற இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தாய்மாருக்கு அணகி முத்திரை பொதிக்கப்பட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன.

அருணலு சிறுவர் கணக்குத் திட்டத்தின் கீழ் இந்த பிரம்மாண்டமான வருடாந்த நிகழ்வு தொடர்ந்து நான்காவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

'அருணலு சேமிப்புக் கணக்கும் அதனூடாக நாம் மேற்கொள்ளும் செயற்பாடுகளும் சிறுவர்களுக்கு அவர்களுடைய வளர்ச்சிப் பருவத்தில் அர்ப்பணத்தோடு நாம் வழங்கி வரும் ஆதரவை பிரதிபலிப்பதாக உள்ளது. சிறுவர்கள் தமது பருவத்தில் அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டிய ஆற்றல்களை ஊக்குவிப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. அத்தோடு அவர்களுக்கான மகிழ்ச்சியோடு சேர்த்து வெகுமதிகளும் வழங்கப்படுகின்றன.' என்று கூறினார் கொமர்ஷல் வங்கியின் சந்தைப்படுத்தல் பிரதிப் பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க.

அருணலு கணக்கிற்கு 6.5வீத வருடாந்த வட்டி வழங்கப்படுகின்றது. இது இலங்கையின் மிகச் சிறந்த சேமிப்புக் கணக்காக கருதப்படுகின்றது. நாட்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிலுக்கான மிகப் பெரிய பணப் பரிசுத் திட்டத்தை ஸ்தாபித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசிலில் தேசிய மட்டத்தில் முதல் மூன்று இடங்களையும் பிடித்துக் கொள்ளும் மாணவர்களுக்கு அவர்கள் தங்களது பதினெட்டு வயதை பூர்த்தி செய்யும் வரை தேவையான கல்வி உதவி வழங்கப்படுகின்றது. இது தவிர அருனலு கணக்கு வைத்திருக்கும் சிறுவர்கள் இந்தப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்றுக் கொள்ளும் போதும் பாடசாலை மட்டத்தில் இதேபோன்ற உச்ச புள்ளிகளைப் பெற்றுக் கொள்கின்ற போதும் ஐம்பதாயிரம் ரூபா பணப் பரிசு வழங்கப்படுகின்றது.
நாடு முழுவதும் உள்ள கொமர்ஷல் வங்கிக் கிளைகளில் பதினெட்டு வயதிற்கு கீழ்ப்பட்டவர்கள் அருணலு சிறுவர் சேமிப்புக் கணக்கை தொடங்கலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X