2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிரீன்வெலி குடியிருப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோம் லான்ட்ஸ் ஸ்கைலைன் நிறுவனத்தின் புத்தம் புதிய பெருமைமிக்க வீட்டுத் திட்டமான, சிறு நகர எண்ணக்கருவிற்கு அமைய நிர்மாணிக்கப்படும் அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்க்ஷ ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி அங்குரார்ப்பண விழாவிற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தவிசாளர் லக்விஜய சாகர பலன்சூரிய, பொது முகாமையாளர் ஸ்ரீமதி வீரசிங்க, ஹோம் லான்ட்ஸ் ஸ்கைலைன் நிறுவனத்தின் தலைவர் நலீன் ஹேரத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.  

மேற்படி வீட்டுத் திட்டமானது, 352 வீடுகளைக் கொண்டதொரு திட்டமாகும். தலா 3 மாடிகளை கொண்ட 22 மாடி வீட்டுத் தொகுதிகளில் மேற்படி 352 வீடுகள் நிர்மாணிக்கப்படுவதோடு 2 அறைகளைக் கொண்ட 288 வீடுகளையும் 03 அறைகளைக் கொண்ட 64 வீடுகளையும் கொண்ட இத்தட்டத்தின் மொத்த காணியின் அளவு 8 ஏக்கர்களாகும்.  

சகல வீடுகளுக்கும் பிரத்தியேகமான மின்சாரம், காஸ் மற்றும் தண்ணீர் மீற்றர் பொருத்தப்பட்டுள்ளதோடு கழிவுகளை அகற்றுவதற்கென ஒழுங்கமைக்கப்பட்ட கழிவகற்றல் கட்டமைப்பொன்று உண்டு. முழுமையாக மூடப்பட்ட காணியொன்றில் மேற்படி வீடுகள் நிர்மாணிக்கப்படுவதால் 100% பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதோடு 24 மணி நேர பிரத்தியேகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மூலம் பாதுகாப்பானதொரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு மேலதிகமாக இரண்டு நீச்சல் தடாகங்கள், உடற்பயிற்சி கூடம், குழந்தை பராமரிப்பு நிலையம், மருத்துவ நிலையம், நடைபாதை, வணிகத் தொகுதிகள், உணவகங்கள் ஆகிய சகல வசதிகளுடனும் கூடிய சிறியதொரு நகரம், இத்திட்ட வளாகத்தில் உருவாக்கப்படுவதால் எவ்வித சிரமுமின்றி தமது அன்றாட பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு மேற்படி வீடமைப்புத் திட்ட வாசிகளுக்கு கிட்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X