2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கௌரவிக்கப்பட்ட கொமர்ஷல் வங்கி

A.P.Mathan   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மிகச் சிறந்த தொழில் வழங்குநர்களில் ஒருவர் மற்றும் மிகச் சிறந்த மனித வள செயற்பாட்டாளர் என்ற கொமர்ஷல் வங்கியின் கீர்த்தி நாமம் மீண்டும் தக்க வைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆறாவது சிறந்த தொழில் வழங்குநர் விருது வழங்கும் விழாவில் இரண்டு கீர்த்திமிக்க விருதுகளை வென்றுள்ளதன் மூலம் இந்த கௌரவம் நிலை நாட்டப்பட்டுள்ளது.

உலக மனித வள காங்கிரஸ், ஸ்டார்ஸ் ஒப் இன்டஸ்ட்ரி குறூப் என்பனவற்றின் ஒத்துழைப்போடும் ஏஸியன் கொன்பெடரேஷன் ஒப் பிஸ்னஸ் நிறுவனத்தின் அங்கீகாரம் என்பவற்றோடும் எம்ப்லோயர் பிறேன்டிங் இன்ஸ்டிடியூட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கோலாகல விழாவில் சிறந்த தொழில் வழங்குநருக்கான முத்திரை விருது மற்றும் ஆற்றல் முகாமைத்துவ விருது என இரண்டு பிரதான விருதுகள் கொமர்ஷல் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதில் சிறந்த தொழில் வழங்குநருக்கான விருது இந்த விழாவில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்துள்ளது. ஆசிய பிராந்தியத்துக்கு பொறுப்பான சிறந்த சந்தைப் படுத்தல் அதிகாரி சிங்கப்பூரின் பான் பசுபிக் மரினா சதுக்கத்தில் இந்த கோலாகல வைபவத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

கொமர்ஷல் வங்கியின் மனித வள பிரிவு பிரதி பொது முகாமையாளர் இசுறு திலகவர்தன இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்டார்.

இந்த சிறப்பு மிக்க விருதை பெற்றுக் கொண்டமைக்காக வங்கியின் மனித வள பிரிவுக்கு பாராட்டு தெரிவித்த முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜெகன் துரைரட்ணம் 'இலங்கையின் மிகப் பெரிய மற்றும் மிகவும் உறுதியான தனியார் வங்கி என்ற வகையில் எமது நிலையை அர்ப்பணம் மிக்க ஒரு ஊழியர் படையும் தொழிலை நேசிக்கும் அதி உயர் தொழிற்சார் பண்பும் கொண்ட ஒரு படையும் இன்;றி நாம் அடைந்திருக்க முடியாது. திறமை உள்ளவர்களைக் கவருவது தொடர்ந்து அவர்களை தக்க வைத்துக் கொள்வது மற்றும் முகாமைத்துவம் செய்வது என்பன எமது வெற்றிக்கு முக்கிய விடயங்களாக உள்ளன. இந்த பிரிவுகளில் எமது மனித வள பிரிவின் அர்ப்பணம் மிக்க செயற்பாட்டுக்கு இது எடுத்துக் காட்டாக உள்ளது'என்றார்.

கொமர்ஷல் வங்கி அதன் ஊழியர்களை பயிற்றுவித்து சிரேஷ்ட பதவிகளை அவர்களுக்கு உரிய காலப்பகுதியில் வழங்கி நீண்ட காலம் அவர்கள் தம்மோடு இணைந்திருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. வங்கி அதற்கே உரிய பிரத்தியேகமான ஊழியர் அபிவிருத்தி நிலையத்தைக் கொண்டுள்ளது. அது தேவையான உள்ளக பயிற்சிகளை வழங்குகின்றது. சகல மட்டங்களிலும் உள்ள ஊழியர்களுக்கு பயிற்சிகளை அளிப்பதற்காக வெளியிலிருந்து வளவாளர்களின் சேவைகளும் பெறப்படுகின்றன. ஊழியர்கள் தமது தொழில்சார் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யத்தக்க வகையில் தேவையான முன்னேற்றகரமான பயிற்சிகள் இங்கு வழங்கப்படுகின்றன. வங்கியில் தற்போது உள்ள சிரேஷ்ட மட்ட முகாமைத்துவ நிலை அதிகாரிகள் பார் பாடசாலையை விட்டு விலகிய கையோடு வங்கியில் இணைந்து கொண்டவர்கள்.

CMO ஆசியா கவுன்ஸிலிடமிருந்து 2014ல் கொமர்ஷல் வங்கி இரண்டு விருதுகளை வென்றுள்ளது. கல்வித் தர முன்னேற்றம் மற்றும் அதற்கான ஆதரவு மற்றும் சுகாதார அக்கறைக்கான விருது ஆகிய இரண்டு விருதுகளுமே வழங்கப்பட்டன. சிங்கப்பூரில் இடம்பெற்ற சிறந்த CSR விருது வழங்கும் விழாவில் இவை வழங்கப்பட்டன.

கொமர்ஷல் வங்கி  நாடு முழுவதும் 243 கிளைகளுடனும், 615 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. இதுவே நாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியாகும். 2014ம் ஆண்டில் மிகச் சிறந்த தனியார் வர்த்தக முத்திரையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2015ல் பினான்ஸ் ஆசியா மற்றும் யூரோ மணி என்பனவற்றால் இலங்கையின் மிகச்சிறந்த வங்கியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. கொமர்ஷல் வங்கி ஏனைய பல சர்வதேச சஞ்சிகைகள் மூலமாகவும் கடந்த பல ஆண்டுகளில் இலங்கையின் தலைசிறந்த வங்கி என தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில்; இலங்கையின் மிகச் சிறந்த பத்து கூட்டாண்மை பிரஜைகளில் ஒன்றாகவும் இலங்கை வர்த்தகச் சபையால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த பத்தாண்டுகளாக இலங்கையின் மிகவும் கௌரவத்துக்குரிய வங்கியாக LMD தர வரிசையில் தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. அத்தோடு கடந்த நான்கு வருடங்களாக இதே தர வரிசையில் இலங்கையின் ஒட்டு மொத்த கூட்டாண்மை நிறுவனங்களுள் மிகவும் கௌரவத்துக்குரிய இரண்டாவது நிறுவனம் என்ற இடத்தையும் தக்கவைத்துள்ளது. 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இதே LMD சஞ்சிகையின் தரவரிசையில் மிகவும் நேர்மையான நிறுவனங்களுள் முதலாவது இடத்தையும் தன்னகத்தே தக்கவைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X