2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

க்ளோகார்ட்டின் புத்துணர்ச்சியூட்டும் ஜெல் பற்பசை தெரிவுகள்

A.P.Mathan   / 2015 நவம்பர் 07 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு காலைப் பொழுதிலும் உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் சுவாசத்தை அளிக்கும் வகையில் க்ளோகார்ட் வர்த்தகநாமத்தின் புதிய க்ளோகார்ட் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் (Clogard Fresh Blast gel) வாய்ப்பராமரிப்பு தெரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.   

புத்துணர்ச்சியூட்டும் சுவாசம் மற்றும் நாள் முழுவதும் நீடிக்கும் புன்சிரிப்புடன் உலகிற்கு முகம் கொடுக்க தயாராகும் உங்களுக்கு க்ளோகார்ட்டின் மூன்று சுவைத் தெரிவுகள் கொண்ட புதிய ஜெல் பற்பசைகள் உங்கள் வதனத்தில் ஒவ்வொரு நாளும் புன்சிரிப்பையும், சுவாசத்தையும் வழங்குவதாக அமையும். 

உயர் தரம் மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய தொடர்ச்சியான புதிய கண்டுபிடிப்புகளுக்கு புகழ்பெற்ற ஹேமாஸ் நிறுவனம் வாய்ச்சுகாதாரம் மற்றும் பராமரிப்பு துறையில் இயற்கை மற்றும் அறிவியல் நலன்களை ஒன்றிணைத்து ஜெல் பற்பசைகளை வடிவமைத்து அறிமுகம் செய்த முதலாவது இலங்கை நிறுவனமாக திகழ்கிறது.

'உள்நாட்டு நிறுவனம் எனும் ரீதியில், வாடிக்கையாளர்களின் தேவைகளை ஹேமாஸ் நன்கு புரிந்து கொண்டுள்ளதுடன், அவர்களின் கருத்துக்களிலிருந்து தேவைகள் மற்றும் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கான உற்பத்திகளை நாம் வழங்கி வருகிறோம். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சிடும் வகையிலான உற்பத்திகளை வழங்குவதற்கான எமது தொடர்ச்சியான முயற்சிகள் ஊடாக இயற்கை நலன்களுடன் அறிவியலின் சிறப்பையும் ஒன்றிணைத்து இலங்கையிலுள்ள எமது நுகர்வோருக்கு அதிசிறப்பானதை பெற்றுக்கொடுப்பதே எமது வழிமுறையாக அமைந்துள்ளது' என ஹேமாஸ் மனுபக்டரிங்(பிரைவற்) லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரோய் ஜோசப் தெரிவித்தார்.

கராம்பு மற்றும் யூக்கலிப்ட்டஸ் தைலம் அடங்கிய வலிமையான சுவை கொண்ட ஸ்பைசி ரெட் ஜெல் பற்பசை பாவனையாளர்களுக்கு எழுச்சியூட்டும் சுவையை வழங்குகிறது. மின்ட் மற்றும் உப்பு சுவை கொண்ட கூலான ப்ளு தெரிவுகள் புத்துணர்ச்சியூட்டக்கூடிய கூலான பல்துலக்கும் அனுபவத்தை வழங்குகிறது. மேலும் நெல்லி மற்றும் கற்றாளை ஒன்றிணைந்த பச்சை பற்பசை நுகர்வோருக்கு இனிமையான ஹேர்பல் அனுபவத்தை பயன்படுத்துநருக்கு வழங்குகிறது. இலங்கை வாடிக்கையாளர்கள் மத்தியில் மேற்கொண்ட ஆய்வுகள் ஊடாக உருவாக்கப்பட்ட மூன்று க்ளோகார்ட் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் தெரிவுகள் கிருமிகளை கட்டுப்படுத்துவதுடன், நீடித்த புத்துணர்ச்சியூட்டும் சுவாசத்தையும் வழங்குகிறது' என மேலும் அவர் தெரிவித்தார்.

ப்ளோரைட், கராம்பு மற்றும் சிங்க் ஒன்றிணைக்கப்பட்ட இயற்கை மற்றும் அறிவியலை சமநிலை கொண்ட க்ளோகார்ட் ஜெல் பற்பசை தெரிவுகள் கிருமிகளை கட்டுப்படுத்தும் முன்னோடியாக தம்மை நிரூபனம் செய்துள்ளதுடன், ஆரோக்கியமான பற்கள், ஈறுகள் மற்றும் நீடித்த புத்துணர்ச்சியை வழங்குகிறது.

க்ளோகார்ட் ஜெல் பற்பசை தெரிவுகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகளுக்கமைய உருவாக்கப்பட்டுள்ளதுடன், அதன் வாக்குறுதிக்கு அப்பாலான சுவையுள்ள உற்பத்தியை வழங்கியுள்ளோம். ஹேமாஸ் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் திமுது ஜயசிங்க கருத்து தொவிக்கையில், 'நீடித்த புத்துணர்ச்சியூட்டும் சுவாசம் பற்பசையின் நட்சத்திரமாக அமைந்துள்ளது. ஹேமாஸ் R&D குழுவினர் வாய்வழி புத்துணர்ச்சியின் இயக்கங்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், சர்வதேச சுவை நிபுணர்களுடன் இணைந்து இயற்கை மற்றும் அறிவியலின் சிறப்பினை கொண்டதும்,  பாவனையாளர்களுக்கு களிப்பூட்டக்கூடியதுமான 'க்ளோகார்ட் ப்ரெஷ் ப்ளாஸ்ட்' ஜெல் பற்பசையை தெரிவுகளை வழங்கியுள்ளது' என்றார். 

'க்ளோகார்ட் ப்ரெஷ் ப்ளாஸ்ட்' ஜெல் பற்பசை தெரிவுகளின் அறிமுகத்தோடு, வலிமையான பற்கள் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சுவாசத்தை உறுதி செய்யக்கூடிய அறிவியல் மற்றும் இயற்கை நலன்களை ஒன்றிணைத்த தரமான வாய் பராமரிப்பில் பரந்துபட்ட தெரிவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே எமது நோக்கமாகும்' என க்ளோகார்ட் உற்பத்தியின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் குஷானி பீரிஸ் தெரிவித்தார்.

க்ளோகார்ட் ப்ரெஷ் ப்ளாஸ்ட் தெரிவுகளுடன் புத்துணர்ச்சியூட்டும் சுவாசத்தையும், தன்னம்பிக்கையையும் இன்றே பெற்றிடுங்கள்!


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X