2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிளின்கர் விநியோக செயற்பாட்டை துரிதப்படுத்தியுள்ள ஹொல்சிம்

A.P.Mathan   / 2015 நவம்பர் 07 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொடர்ச்சியான சீமெந்து விநியோகத்தை மேற்கொள்ளும் வகையில், ஹொல்சிம் லங்கா, கப்பல் - கப்பல் (Ship to Ship) செயற்பாடுகளை முன்னெடுக்க முன்வந்துள்ளது. இதன் மூலமாக இலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானத்துக்கு 0.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களிப்பு செய்ய ஹொல்சிம் திட்டமிட்டுள்ளது.

இந்த செயற்பாட்டின் மூலமாக, பாரிய கப்பல்கள் இலங்கையின் எல்லைக்குட்பட்ட கடற்கரைக்கு சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களை கொண்டுவருவதுடன், அவற்றை சிறியளவிலான கடற்கரைக் கப்பல்களைக் கொண்டு ருஹுணு சிமென்ட் வேர்க்ஸ் தொழிற்சாலைக்கு காலி துறைமுகத்தினூடாக கொண்டு செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலமாக அதிகரித்துச் செல்லும் இறக்குமதி செய்யப்படும் கிளின்கர் தேவையை நிவர்த்தி செய்ய ஹொல்சிம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.

2012இல், காலியில் அமைந்துள்ள ருஹுணு சிமென்ட் வேர்க்ஸ் இல் 2.6 பில்லியன் ரூபாயை ஹொல்சிம் லங்கா முதலீடு செய்திருந்தது. இதன் காரணமாக, உற்பத்தி அதிகரிப்பு ஏற்பட்டதுடன், இறக்குமதி செய்யப்படும் கிளின்கருக்கான கேள்வியும் அதிகரித்திருந்தது. ஆனாலும், காலி துறைமுகம் 10,000 மெட்ரிக் தொன்கள் எடைக்கு குறைந்தளவு கப்பல்களை மட்டுமே உள்வாங்கக்கூடிய கொள்ளளவை கொண்டுள்ளது. இதன் காரணமாக விநியோகத்தில் பெருமளவு சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. இந்த சிக்கல் நிலை தற்போது நிவர்த்தி செய்யப்பட்டு, ஹொல்சிம் நிறுவனத்தின் மூலமாக பெருமளவு கப்பல்கள் காவிச் செல்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளதால், பெருமளவு கிளின்கர்கள் இறக்குமதி செய்யப்படுவது உறுதி செய்யப்படுகிறது. 

ஹொல்சிம் லங்காவின் விநியோகத் தொடரின் பதில் தலைவர் சரித் விஜேந்திர கருத்துத் தெரிவிக்கையில், 'பெரியளவிலான கப்பல்களில் கொண்டு வரப்படுவதால் விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும். கிளின்கர்கள் பெருமளவில் வியட்நாம், தாய்லாந்து, சீனா, கொரியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பெருமளவு கிளின்கர் ஏற்றுமதிகளை மேற்கொள்ளும் நாடுகளுடன் ஹொல்சிம் தொடர்புகளை கொண்டுள்ளதால், சிறந்த உயர் தரம் வாய்ந்த மூலப்பொருட்களை தெரிவு செய்வதற்கு உதவியாக அமைந்திருக்கும். இதன் மூலமாக நாம் உற்பத்தி செய்யப்படும் சீமெந்தின் தரமும் உயரும். அத்துடன், சிறிய கப்பல்களை இயக்குவதன் மூலமாக, கேளிவியில் சடுதியாக ஏற்படும் அதிகரிப்பை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்' என்றார்.

திருகோணமலை மற்றும் காலி துறைமுகங்களில் பெருமளவு பொருட்களை கொண்டு செல்லும் செயற்பாடுகளுக்கு ஹொல்சிம் லங்கா அதிகளவு பங்களிப்பை வழங்குவதன் மூலமாக இலங்கை துறைமுக அதிகார சபைக்கு அதிகளவு வருமான பங்களிப்பை வழங்குகிறது. கப்பல் - கப்பல் செயற்பாடுகளின் மூலமாக ஹொல்சிம் லங்கா கப்பல்களுக்கான கொடுப்பனவுகளையும் மேற்கொள்ளும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

திருகோணமலை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களும் காலி துறைமுகத்துக்கு கடல் மார்க்கமான அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் வீதிகளினூடாக கொண்டு செல்கையில் ஏற்படக்கூடிய இடர்கள் தவிர்க்கப்படுகின்றன. சாதாரண நிலைகளில் 150 க்கும் அதிகமான வாகனங்கள் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஈடுபடுத்தப்பட்டிருக்கும். கப்பல் - கப்பல் செயற்பாட்டின் மூலமாக இந்த தேவை தற்போது 40 ஐ விட குறைந்துள்ளது.

முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் ஹொல்சிம் லங்கா கடல் வழி சரக்கு கையாள்கை செயற்பாடுகளை மேற்கொள்வதுடன், இதற்காக கப்பல் போக்குவரத்து விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறது. இலங்கை சுங்க திணைக்களத்தின் சகல வரிகளையும் செலுத்துகிறது.

கடந்த தசாப்த காலத்தில் இலங்கையர்களின் நம்பிக்கையை வென்ற சீமெந்து விநியோகஸ்த்தர் எனும் வகையில், ஹொல்சிம் மக்;களின் மனங்களை கவர்ந்த நாமமாக அமைந்துள்ளது. இலங்கையில் காணப்படும் மூன்று இல்லங்களில் ஒன்றில் ஹொல்சிம் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X