Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 11 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஹ்ரைன் நாட்டின் தேசிய விமான சேவையான கல்ஃப் எயார், ஜனவரி 19, 2017 முதல் இலங்கைக்கு வாரம் ஐந்து விமானப் பயணங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
வழித்தடத் தொடக்கத்தைக் குறித்து கருத்துதெரிவித்த கல்ஃப் எயார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான, மஹர் சல்மான் அல் முசல்லம், கல்ஃப் எயார் நிறுவனத்துக்கும் கொழும்பில் உள்ள பொது விற்பனை முகவரான, மேக் எயார் நிறுவனத்துக்கும் இடையே உள்ள கனிந்த உறவையும் ஒத்துழைப்பையும் பாராட்டிப் புதிய வலையமைப்பு விரிவாக்கத்தைக் குறித்து பேசினார். “கல்ஃப் எயாரின் புதிய வழித்தடச் சேவைகள் இரண்டு வாரங்கள இருக்கும் நிலையில், அதிகமான பயணிகள் பயனடையும் பொருட்டு ஆசிய நெட்வோர்க்கை, மேலும் வலுப்படுத்த முயன்று வருவதாகத் தெரிவித்தார். பயணிகளின் பிரயாணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தங்கள் பொது விற்பனை முகவரான மேக் எயார் உடன் இணைந்து மிகவும் உயர்தரமான பயணத் தீர்வுகளை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
கல்ஃப் எயார் விமானங்களை, விமானச் சேவையின் அனைத்து சொப்பிங் வசதிகளும் வழங்கப்படும் gulfair.com இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம், அதில் ஹோட்டல் முன்பதிவுகள், கார் வாடகை, பயணக் காப்பீடு போன்றவற்றைப் பெறலாம், மேலும் ஊரைச் சுற்றிக்காட்ட அழைத்துச் செல்லும் வசதிகள், அருங்காட்சியக நுழைவுச்சீட்டுகள், சுற்றுலாக்கள், உள்ளூர் தேவைகள் மற்றும் சேருமிடத்துக்குச் செல்லும் விமான மாற்றங்கள் போன்ற கூடுதல் பயண வசதிகளையும், கல்ஃப் எயார் டூர்ஸ் சேவை மூலம் பயணிகள் பெற்று பயனடையலாம்.
6 hours ago
9 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
20 Sep 2025