Editorial / 2026 மார்ச் 13 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியா மற்றும் இலங்கையில் வெற்றிகரமாக அண்மையில் நிறைவடைந்த 2026 ஐசிசி (ICC) ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரின் போது, பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யும் நோக்கில் கொக்கா-கோலா நிறுவனம் முன்னெடுத்த ‘Give Back Life’ செயற்திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அதிகாரப்பூர்வ பானப் பங்காளராக கைகோர்த்த கொக்கா-கோலா நிறுவனம், தனது 'பொதியிடல்' (Packaging) கொள்கையின் கீழ் 'வடிவமைப்பு' மற்றும் 'சேகரிப்பதற்கான கூட்டாண்மை' ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. 2035 ஆம் ஆண்டுக்குள் தான் சந்தையில் அறிமுகப்படுத்தும் போத்தல்கள் மற்றும் டின்களில் 75 சதவீதத்தை மீளச் சேகரிக்கும் இலக்கை நோக்கி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற்ற போது, கொக்கா-கோலா பிவரேஜஸ் ஸ்ரீலங்கா (CCBSL) நிறுவனம் 'நெப்டியூன் ரீசைக்கிளர்ஸ்' அமைப்புடன் இணைந்து PET போத்தல்கள் மற்றும் அலுமினிய டின்களைச் சேகரிக்கும் பணிகளை முன்னெடுத்தது.
இந்த முயற்சியில் ஈடுபட்ட தன்னார்வலர்களுக்கு கழிவுகளைத் தரம் பிரித்தல் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை ஆகியவற்றுடன் இணைந்து இச்செயற்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
இது குறித்து CCBSL நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதீப் பாண்டே தெரிவிக்கையில்,
"ஒரு போத்தல் அல்லது டின்னைச் சரியான முறையில் அப்புறப்படுத்துவது போன்ற சிறிய பழக்கவழக்கங்கள், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்றிணைந்து செய்யும்போது பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். போட்டி முடிந்த பின்னரும் சூழலைத் தூய்மையாக வைத்திருப்பதில் பங்காற்றுவதை நாங்கள் பெருமையாகக் கருதுகிறோம்," என்றார்.
தற்போது வரை ‘Give Back Life’ திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் 650-க்கும் மேற்பட்ட PET பிளாஸ்டிக் சேகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் 21 பாரிய கூடாரங்கள் மற்றும் 15 மூலப்பொருள் மீட்பு மையங்கள் அடங்கும். மேலும், 'கடற்கரையைத் தத்தெடுத்தல்' (Adopt A Beach) திட்டத்தின் கீழ் 8 கடற்கரைகள் நாளாந்தம் தூய்மைப்படுத்தப்படுகின்றன.
சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க, கழிவுகளைச் சேகரிப்பதற்காக முதலாவது மின்சார முச்சகர வண்டியையும் இத்திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளதுடன், குறைந்த கார்பன் வெளியேற்றத்துடன் கூடிய நிலையான தீர்வுகளை நோக்கி நகர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago