2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையுடன் லிட்ரோ காஸ் கைகோர்ப்பு

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

திரவ பெற்றோலிய வாயுவை இலங்கையில் இறக்குமதி செய்து விநியோகிக்கும் சந்தை முன்னோடியான லிட்ரோ காஸ், தேசிய கடற்கரை சுத்திகரிப்பு நிகழ்ச்சித்திட்டத்துக்கு பிரதான அனுசரணை வழங்கியிருந்தது. இந்த திட்டத்தை கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபை ஏற்பாடு செய்திருந்தது. மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இந்த அதிகாரசபை இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

வருடாந்தம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தினூடாக கடற்கரைகள் சுத்திகரிக்கப்படுவதுடன், இதன் மூலம் எதிர்காலச் சந்ததியின் ஆரோக்கியம் பேணுவதற்கான பங்களிப்பு வழங்கப்படுகிறது. செப்டெம்பர் 19 ஆம் திகதி மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சமூக பொறுப்புணர்வுத் திட்டம், செப்டெம்பர் 23 ஆம் திகதி தென் மாகாணத்தில் நிறைவடைந்திருந்தது. இந்த செயற்பாடுகளின் போது, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, புத்தளம், மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி ஆகிய நகரங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன.

லிட்ரோ காஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் நிறைவேற்று தலைவர் ஷாலில முனசிங்க கருத்துத் தெரிவிக்கையில், 'கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையுடன் கைகோர்த்து, நாடு முழுவதும் காணப்படும் கடற்கரைகளை சுத்தம் செய்திருந்ததையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். சமூகத்துக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பு வழங்குவது என்பதற்கமைய நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளில் மற்றுமொரு உள்ளம்சமாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது. தனது சகல பங்காளர்கள் மற்றும் நாட்டின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சூழல் ஆகியன தொடர்பில் அதிகளவு அக்கறை செலுத்த தன்னை அர்ப்பணித்த நிறுவனமாக லிட்ரோ காஸ் திகழ்கிறது' என்றார்.

சில கடற்கரைகள் கண்ணாடி, பிளாஸ்ரிக் பொதிகள், போத்தல்கள், தேங்காய் சிரட்டைகள், பழைய சப்பாத்துக்கள் போன்ற பல பொருட்களால் மாசடைந்திருந்தன. இந்த கழிவுப் பொருட்கள் கடற்கரைச் சூழலை அண்மித்து வசிப்போருக்கு மட்டும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துவிடாமல், நுளம்பு பெருக்கத்துக்கும் டெங்கு வைரஸ் பரவலுக்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன. அத்துடன், கடல்சார் விலங்களுக்கும் இவை பெரும் பாதிப்பாக அமைந்திருக்கும். 

மற்றொரு விடயமாக, இலங்கை ஒரு சுற்றுலா நாடாக கருதப்படுகிறது. பெருமளவானோர் கடற்கரைசார் விடுமுறையை செலவிட விரும்புகின்றனர். பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்துடன் இணைந்து குப்பைகள் முறையாக அகற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 

லிட்ரோ காஸ் நிறுவனம் இது போன்ற செயற்பாடுகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகிறது. தனது பிராந்திய ஊழியர்கள் அணியினரின் மூலமாக புத்தளம், யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகளில் கைகோர்த்திருந்தது. 

கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபை என்பது, வினைத்திறன் வாய்ந்த சட்ட விதிமுறைகளின் அமுலாக்கத்தின் மூலமாக கடற்கரை மாசுறலை தடுத்தல் மற்றும் நிர்வகிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் அமைப்பாக திகழ்கிறது. இது தொடர்பாக முன்னெடுக்கப்படும் சர்வதேச மாநாடகள், ஒருங்கிணைப்பு சந்திப்புகள் போன்றவற்றின் தீர்மானங்களை தனது வளங்களைக் கொண்டு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தனியார்-பொது பங்காண்மைகளினூடாக மேற்கொள்கிறது. இதன் மூலம் இலங்கையை 2020 ஆம் ஆண்டளவில் மாசற்ற கடற்கரை கொண்ட நாடாக திகழச் செய்து, நாட்டு மக்களின் ஆரோக்கியத்துக்கு நிலையான பங்களிப்பை வழங்குவதை நோக்காக கொண்டுள்ளது.

லிட்ரோ காஸ் லங்கா லிமிட்டெட், இலங்கையில் திரவப் பெற்றோலிய வாயு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளில் முன்னோடியாக திகழ்கிறது. இதற்காக தனது அங்கத்துவ கம்பனியாக லிட்ரோ காஸ் டேர்மினல் லங்கா (பிரைவட்) லிமிட்டெட் நிறுவனத்துடன் கைகோர்த்து செயலாற்றி வருகிறது. 'லிட்ரோ காஸ்' வர்த்தக நாமத்தின் உரிமையாண்மையை இந்நிறுவனம் கொண்டுள்ளது. நாடு முழுவதும் காணப்படும் 4700 விற்பனை நிலையங்களினூடாக மக்களுக்கு தனது சேவைகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பு தரங்களை கடுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் லிட்ரோ காஸ் கீர்த்தி நாமத்தை கொண்டுள்ளதுடன், கம்பனியின் கொள்கையில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X