2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கம்பஹா மாவட்டத்தில் சுகாதார பராமரிப்பு திட்டம் முன்னெடுப்பு

A.P.Mathan   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவுத் ஏசியா டெக்ஸ்டைல் இன்டஸ்ரீஸ் லங்கா மற்றும் சர்வதேச ரொட்டரி கழகத்தின் உள்ளங்கமான கொழும்பு மேற்கு இன்னர் வீல் கழகம் ஆகியன இணைந்து கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு சுகாதார பராமரிப்பு திட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தன. இதில் வயது முதிர்ந்தவர்களுக்கு நடைப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான பாதைகளை அமைத்துக் கொடுப்பது மற்றும் 150 கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தன. இந்த இரு திட்டங்களும் பூகொட சென்ரல் டிஸ்பென்சரியில் பூர்த்தி செய்யப்பட்டிருந்தன.   

Victoria's Secret, Marks and Spencer, NEXT, Adidas, Columbia Sportswear, PVH/Calvin Klein, Tesco F&F மற்றும் மேலும் பல ஆடை நாமங்களின் உற்பத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும் சவுத் ஏசியா டெக்ஸ்டைல் இன்டஸ்ரீஸ் லங்கா, இன்னர் வீல் கழகத்துக்கு, இந்த மருத்துவ நிலையத்தை அண்மித்த பகுதியில் சுமார் 100 மீற்றர் தூரத்துக்கு நடைப் பயிற்சியை மேற்கொள்வதற்கு அவசியமான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்திருந்தது. பூகொட பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையை அண்மித்து அந்த மருத்துவ நிலையம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இந்த வசதிகளை உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கும் வகையில், ஞாபகார்த்த சின்னத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில், சவுத் ஏசியா டெக்ஸ்டைல் இன்டஸ்ரீஸ் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரித்திவ் எஸ்.துரை கருத்து தெரிவிக்கையில், 'இன்னர் வீல் கழகத்துடன் கைகோர்த்துள்ளமையானது உண்மையில் எமக்கு மிகவும் பெருமை சேர்க்கும் விடயமாக அமைந்துள்ளது. குறிப்பாக பூகொட சென்ரல் டிஸ்பென்சரிக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கக்கூடியதாக இருந்தது. அங்கு விஜயம் செய்யும் கர்ப்பிணித் தாய்மார் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் நலன் கருதி இந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்தது' என்றார்.

கொழும்பு மேற்கு இன்னர் வீல் கழகத்தின் தலைவர் குமுதினி குலசிங்க கருத்து தெரிவிக்கையில், 'தமது அயலவர்களுக்கு உதவுவது என்பது திரு. துரை அவர்களின் எண்ணத்தில் எப்போதும் இருந்திருக்கக்கூடும். அதன் காரணமாகவே, இந்த பெண்கள் மருத்துவநிலையத்துக்கு அவர் உதவியை வழங்க முன்வந்துள்ளார். இந்த மருத்துவநிலையம் அவரின் தொழிற்சாலைக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது. இந்த மருத்துவநிலையத்துக்கு ECG இயந்திரம் ஒன்றையும் ஏற்கனவே அன்பளிப்பு செய்துள்ளார். மருத்துவநிலையத்தின் அதிகாரிகள், சவுத் ஏசியா டெக்ஸ்டைல் இன்டஸ்ரீஸ் லங்கா நிறுவனத்துக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை' என்றார். 

மேலும், குலசிங்க தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'இன்னர் வீல் கழகம், சவுத் ஏசியா டெக்ஸ்டைல் இன்டஸ்ரீஸ் லங்கா உடன் இணைந்து, சுமார் 150 கர்ப்பிணி தாய்மாருக்கு உலர் உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதன் மூலம் அந்த தாய்மாருக்கு பணத்தை மீதப்படுத்திக் கொள்ள முடிந்ததுடன், ஆரோக்கியமான தாய்மை நிலையை பேணவும் உதவியாக அமைந்திருந்தது. இன்று அறிமுகம் செய்யப்பட்ட நடைப் பயிற்சிக்கான பகுதி, வயது முதிர்ந்தவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. அநாவசியமாக மருந்துகளை உள்ளெடுப்பதற்கு பதிலாக, இவற்றின் மூலமாக அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை கொண்டு நடத்தக்கூடியதாக இருக்கும். இந்த வசதிகளை அவர்கள் முறையாக பயன்படுத்துவார்கள் என நாம் எதிர்பார்க்கிறோம்' என்றார்.

லங்கா சென்ச்சரி இன்வெஸ்ட்மன்ட்ஸ் பிஎல்சி மற்றும் சிலோன் லெதர் புரொடக்ட்ஸ் பிஎல்சி ஆகியவற்றின் அங்கத்துவ நிறுவனமாக சவுத் ஏசியா டெக்ஸ்டைல் இன்டஸ்ரீஸ் லங்கா திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X