2025 ஜூலை 05, சனிக்கிழமை

கொமர்ஷல் வங்கி மட்டக்களப்பு மற்றும் வெலிமடயில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை முன்னெடுப்பு

Freelancer   / 2025 ஜூலை 04 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மற்றும் வெலிமட ஆகிய பகுதிகளில் இரு வேறு நிகழ்ச்சிகளை நடத்தியதன் மூலம், இலங்கையில் விவசாய மாற்றத்திற்கான தனது உறுதிப்பாட்டை கொமர்ஷல் வங்கி மேலும் வலுப்படுத்தியுள்ளது. விவசாயிகள், குறிப்பாக விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள், நவீன, நிலையான பயிர்ச்செய்கை நடைமுறைகளை மேற்கொள்வதற்கான கருவிகள், அறிவு மற்றும் நம்பிக்கையுடன் அவர்களைத் தயார்படுத்துவதே இந்த நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கமாகும்.

வங்கியின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இரண்டு நிகழ்வுகளும் நடத்தப்பட்டன, இது நாட்டின் முக்கிய விவசாயத் துறையில் புத்தாக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கான முன்னணி பங்குதாரராக வங்கியின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மட்டக்களப்பில் உள்ள மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஒரு அறிமுக மற்றும் விழிப்புணர்வு அமர்வில் 75 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பங்குபற்றியதுடன் இந்த அமர்வில் நிதியியல் கல்வியறிவு, நவீன விவசாய இயந்திரங்களின் பயன்பாடு மற்றும் நெல்பயிர்ச்செய்கையில் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் பயன்பாடு ஆகிய மூன்று முக்கியமான பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதிகள் பொறுப்பான நிதி முகாமைத்துவம் மற்றும் முறையான கடன் அணுகல் குறித்த விவாதங்களுக்கு தலைமை தாங்கினர், அதே வேளை இதில் கலந்து கொண்ட பிரவுன் நிறுவனம் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் தொழிலாளர் சார்புநிலையைக் குறைக்கவும் வடிவமைக்கப்பட்ட அதிநவீன இயந்திரங்களை பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

இந்திரா குழுமத்தின் ஸ்தாபகரும், ஸ்மார்ட் விவசாயத்தில் நிபுணருமான எம். ராஜேதன், கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடத்தைச் சேர்ந்த கல்வியாளர்களுடன் இணைந்து ட்ரோன் உதவியுடன் விவசாயம், இயந்திரமயமாக்கப்பட்ட நடவு மற்றும் தரவு சார்ந்த உள்ளீட்டு உகப்பாக்கம் போன்ற நவீன நுட்பங்களைப் பற்றிய நடைமுறை நுண்ணறிவுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சித்திட்டம் விவசாயத் துறை, மத்திய வங்கி மற்றும் உள்ளூர் விவசாய அதிகாரிகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.

வெலிமடை மற்றும் பண்டாரவளை பகுதிகளைச் சேர்ந்த 50 விவசாயிகளை இலக்காகக் கொண்டு, வெலிமடையில் உள்ள திவுரும்வெல ஆலயத்தில் நடத்தப்பட்ட மற்றொரு திட்டத்தில், மேட்டு நில பயிர்களுக்கான அரை-பாதுகாக்கப்பட்ட விவசாய நடைமுறைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. இந்த முயற்சியானது காலநிலை அழுத்தத்திலிருந்து விவசாயிகளின் பயிர்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் மகசூல் மற்றும் நிலைத்தன்மையை அதிகரிக்கும் மேம்பட்ட பயிர்ச்செய்கை நுட்பங்களுடன் விருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது. இதில் விவசாயிகள் விவசாய வல்லுநர்கள், தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் மற்றும் இ.எம்.கே. ஏக்கநாயக்க போன்ற விவசாய விஞ்ஞானிகளிடமிருந்து சிறந்த பயிற்சி மற்றும் வடிவமைக்கப்பட்ட ஆலோசனைகளைப் பெற்றனர். இந்த திட்டம் பூச்சிகளுக்கெதிரான முகாமைத்துவம், நீர்ப்பாசனம் மற்றும் காலநிலை-எதிர்ப்பு விவசாயத்திற்கான நடைமுறை முறைமைகளை உள்ளடக்கியது, அதே வேளை மண் உணரிகள் மற்றும் சொட்டு நீர் பாசன முறைமைகளுக்கான கருவிகளைப் பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .