2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கல்விக்கு வலுவூட்டும் CDB சிசு திரி

Gavitha   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் பினான்ஸ் பிஎல்சி அதன் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் முக்கிய பகுதியான கல்விக்கான ஆதரவுடன், CDB 'சிசு திரி' திட்டத்தின் 8ஆம் திட்டத்தின் ஊடாக தேசிய பரீட்சைகளில் உயர் சாதனையீட்டிய மாணவர்களுக்கு 46 புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. CDB நிறுவனமானது அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வினை டவுன் ஹோல் கொழும்பு 10 இல் ஒழுங்கு செய்திருந்ததுடன், பிரதம விருந்தினர்களான ஆலோசகர் குழந்தைகள் மனநல பேராசிரியர் ஹேமமாலி பெரேரா மற்றும் CDB இன் தலைவர் ஹெர்சேல் குணவர்தன ஆகியோர் தேசத்தின் எதிர்காலத்துக்கு தமது பங்களிப்பை வழங்கவுள்ள இம் மாணவர்களை கௌரவித்திருந்தனர்.

CDB இன் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹேஷ் நாணயக்கார தெரிவித்ததாவது, 'CDB ஐ பொறுத்த வரை, நாம் எப்போதும் வலுவூட்டிவரும் நிலையான வளமாக கல்வி திகழ்கிறது. இதுவே துடிப்பான மற்றும் சக்தி வாய்ந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளம் என்பதை நாம் நன்கறிந்துள்ளோம். இளம் தலைமுறையினர் தரமான கல்வியைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டியமை எம்மைப் போன்ற கூட்டாண்மை நிறுவனங்களின் பொறுப்பாக இருக்க வேண்டும். எந்தவித பொருளாதார நெருக்கடிகளுமின்றி மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர்வதற்கான வசதியை நாம் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும்' என்றார்.

இத்திட்டத்தின் மூலம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெற்றியாளர்களுக்கு 50,000 ரூபா படி க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றும் வரை வழங்கப்படும். அதேபோல க.பொ.த சாதாரண தரப் பரீட்;சையில் உயர் சித்தி எய்தும் மாணவர்களுக்கு தலா 30,000 ரூபாய் படி அவர்கள் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றும் வரை வழங்கப்படும். CDB நிறுவனமானது நிதித் தொகையினை மாணவர்களின் கணக்கிலிடாமல் பெற்றோரிடம் ஒப்படைக்கின்றமையினால் அதன் அனுகூலங்களை மாணவர்கள் நேரடியாக அனுபவிக்க முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X