2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

களுபோவில வைத்தியசாலைக்கு அமானா வங்கி தொடர்ந்தும் உதவி

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமானா வங்கி கொழும்பு தெற்கு (களுபோவில) பொது வைத்தியசாலையின் சிறுவர் தொகுதியில் பயன்படுத்துவதற்குரிய பெறுமதியான மருத்துவ மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களையும், காற்று மெத்தைகளையும் வழங்கி அதன் பணிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. வங்கியின் பிரதம நிதி அதிகாரி அலி வாஹிதும், நுகர்வோர் வங்கியியல் மற்றும் மூலோபாய சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவரும் இந்த அன்பளிப்புக்களை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அசேல குணவர்தனவிடம் கையளித்தனர். இந்நிகழ்வில் வைத்தியர்கள், தாதிமார்கள் மற்றும் அமானா வங்கியின் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

சிறுவர் தொகுதியை பராமரித்து வரும் அமானா வங்கி கடந்த காலத்தில் பல்வேறு வழிகளில் இந்தத் தொகுதிக்கு உதவி செய்துள்ளது. 2014ம் ஆண்டின் நடுப்பகுதியில் டெங்கு நோயினால் மிகவும் கஷ;டப்பட்ட நோயாளர்களுக்கு தகுந்த நேரத்தில் சிகிச்சையளிப்பதற்கு உதவும் வகையில் மருத்துவ உபகரணங்களை வழங்கியமை உட்பட பல வழிகளில் உதவிகள் செய்யப்பட்டன. 

வங்கியின் இந்தப் புதிய பங்களிப்புக் குறித்து கருத்து வெளியிட்ட அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. முஹம்மத் அஸ்மீர் அவர்கள் ' களுபோவில போதனா வைத்தியசாலையுடன் இந்த தொடர்பை பேணிவருவது பற்றி நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இந்தத்  தொகுதியின் நடவடிக்கைகளை மிகவும் வினைத்திறனாக முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த உபகரணங்கள் மிகவும் துணையாக அமையும் அதேவேளை, நோயாளர்களை முறையாக குணப்படுத்துவதற்கு இது உதவும் என்று நாம் நம்புகின்றோம் ' எனக் குறிப்பிட்டார். 

தனது கருத்தையும் பகிர்ந்துக்கொண்ட டொக்டர் குணவர்தன அவர்கள் 'எமது வைத்தியசாலை மீதும், இந்தத் தொகுதி மீதும் அமானா வங்கி கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டுவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். இதற்கு நாம் உண்மையில் நன்றிக்கடன் பட்டுள்ளோம். நாம் சமூகத்திற்கு செய்யும் சேவையை புரிந்து கொண்ட இவர்கள் சிறுவர் தொகுதியின் தேவைகளை நிறைவேற்ற எப்போதும் உதவி வருகின்றனர்' என்று குறிப்பிட்டார். 

இலங்கையில் வட்டிசாராத வங்கி முறையுடன் முற்றிலும் இணங்கி செயற்படும் முதலாவது உத்தரவுபெற்ற வர்த்தக வங்கியான அமானா வங்கி, கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின் திரிசவி சபையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு வங்கியாகும். தனது மூலோபாய பங்காளிகளான மலேஷpயா பேர்ஹாட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களதேஷpன் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு,  நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X