2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு கௌரவம்

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலையான அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கின்றமைக்காக களனி கேபிள்ஸ் பிஎல்சிக்கு, தேசிய கிறீன் விருதுகள் வழங்கலில் வெள்ளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. தனியார் தொழில்முயற்சியாளர் பிரிவில் களனி கேபிள்ஸ் இந்த விருதை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகள் வழங்கும் வைபவம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை மஹாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. இதற்கு மத்திய சூழல் அதிகாரசபை பங்களிப்பை வழங்கியிருந்தது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

சூழலுக்கு பாதுகாப்பான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அரச, தனியார் மற்றும் பாடசாலைகள் போன்றன இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டிருந்தன. இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல்கள் கேபிள் உற்பத்தி பிரிவில் கௌரவிக்கப்பட்ட ஒரே நிறுவனமாக களனி கேபிள்ஸ் திகழ்ந்திருந்தது.

களனி கேபிள்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால கருத்து தெரிவிக்கையில், களனி கேபிள்ஸ் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் வழங்கி வரும் சேவைகளுக்கு கிடைத்த மற்றுமொரு கௌரவிப்பாக இந்த கிறீன் விருது அமைந்துள்ளது என்றார். '2010 ஆம் ஆண்டு, களனி கேபிள்ஸ் நாட்டின் நிலையான அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருந்தது. குறுகிய காலப்பகுதியில், கம்பனியின் மூலமாக பெருமளவு உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுக் கொள்ள முடிந்தது. நிறுவனம் எனும் வகையில், நாம் சூழல் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துகிறோம். வளங்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றின் விரயத்தை குறைந்த மட்டத்தில் பேணுவது தொடர்பில் கவனம் செலுத்துகிறது. சூழலுக்கு பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், தனது சமூக பொறுப்புணர்வு செயற்பாடாக, பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தது' என்றார்.

சிறந்த சூழல் முகாமைத்துவ செயற்பாடுகளுக்காக ISO 14001:2004 தரச் சான்றை கம்பனி பெற்றிருந்தது. 2012 மற்றும் 2013 இல் 'National Cleaner Production Awards' இல் நிறுவனம் மெரிட் விருதையும் வென்றிருந்தது. 'Geo Responsibility Award' 2014 2014 இல் சூழல் முகாமைத்துவ கட்டமைப்பு ஒழுக்கநெறிக்கான மெரிட் விருதையும் களனி கேபிள்ஸ் தனதாக்கியிருந்தது. இதனைத்தொடர்ந்து 2015 தேசிய கிறீன் விருதுகள் வழங்கலில் வெள்ளி விருதையும் நிறுவனம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மஹாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் 'National Green Reporting System' என்பதற்கமைய கைகோர்த்துள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக களனி கேபிள்ஸ் பிஎல்சி திகழ்கிறது. மேலும், களனி கேபிள்ஸ் தனது கம்பனி வளாகத்தை சுகாதாரமானதாகவும், பாதுகாப்பானதாகவும் பேணுகின்றமைக்காக 'Responsible Care' இலச்சினையை பெற்றுள்ளது.

கம்பனியின் நிலையான அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் களனி கேபிள்ஸ் பிஎல்சி தொழில்நுட்ப சேவைகள் முகாமையாளர் ஷியாமா பெரேரா கருத்து தெரிவிக்கையில், கம்பனி 3R (Reduce-Reuse-Recycle) கொள்கையை பின்பற்றி வருகிறது. மூலப்பொருட்கள், வலு மற்றும் நீர் ஆகியவற்றை உச்ச பயனை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் கம்பனியின் செயற்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன' என்றார்.

'எமது ஊழியர்களுக்கு நாம் தொடர்ச்சியாக சூழலுக்கு பாதுகாப்பான தொழில்நுட்பங்கள் பற்றிய விளக்கங்களை வழங்கி வருகிறோம். சூழல் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தும் நிறுவனம் எனும் வகையில், மீள் சுழற்சி தொடர்பில் நாம் அதிக ஈடுபாட்டை காண்பிக்கிறோம். எமது பிரதான மூலப்பொருட்களிலிருந்து கழிவாக வெளியேற்றப்படும் செப்பு மற்றும் அலுமினியம் போன்றன முழுமையான மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. இவ்வாறான வெளியேற்றப்படும் மூலப்பொருள் கழிவுகள் உள்நாட்டு சிறிய மற்றும் மத்தியளவு நிறுவனங்களுக்கு தமது உற்பத்தி செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்காக வழங்கப்படுகின்றன. எமது உணவகம் மற்றும் சமையலறையில் மீதமாகும் பொருட்களை எமது கிறீன் காஸ் அலகில் இடப்பட்டு, அதன் மூலம் பச்சை வாயு உணவு தயாரிப்புக்காக உற்பத்தி செய்யப்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் திரவ உரம், கம்பனி வளாகத்தில் பயன்படுத்தப்படுவதுடன், ஊழியர்களுக்கு மரக்கறி வகைகள் மற்றும் ஏனைய செய்கைகளை முன்னெடுப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் களனி கேபிள்ஸ், உலக சுற்றுச்சூழல் தினத்தை எமது ஊழியர்களை ஈடுபடுத்தி முன்னெடுத்து வருகிறது' என்றார்.

களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 46 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 

2008 இல் களனி கேபிள்ஸ் பிஎல்சி 'சுப்பர் பிரான்ட்' நிலையை எய்தியிருந்தது. குறிப்பாக நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பாண்மைச் செயற்பாடுகளுக்காக கம்பனி இந்த நிலையை எய்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. களனி கேபிள்ஸ் 2008 இல் 'CNCI துறைசார் சிறப்புக்கான விருதை வென்றிருந்தது.

SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. 2013 இல் இடம்பெற்ற SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் வழங்கலில், இதே பிரிவில் தங்க விருதை தனதாக்கியிருந்தது. 

SLITAD மக்கள் அபிவிருத்தி 2013 விருதகள் வழங்கும் நிகழ்வில், தனது ஊழியர்களின் பயிற்சிகள் மற்றும் மற்றும் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தமைக்காக தங்க விருதையும் தனதாக்கியிருந்தது. 

ளனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5S விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 

களனி கேபிள்ஸ் பிஎல்சி 2015இல் ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமமாகவும் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X