Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 17 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர் நலனை இலக்காகக் கொண்ட சமூகநல சேவைத் திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் அமானா வங்கி, கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலையிலுள்ள சிறுவர் சிகிச்சை பிரிவின் (15B) அபிவிருத்திக்கு மற்றுமொரு பங்களிப்பைச் செய்துள்ளது.
நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க அன்றாடம் பயன்படுத்தப்படும் வைத்திய உபகரணங்களின் தொகுதியொன்றையும் Auto Clave Sterilizer ஒன்றையும் அமானா வங்கி நன்கொடையளித்துள்ளது. அவற்றைத் தவிர, சிகிச்சைக்காக வார்ட்டில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அன்பளிப்புகளையும் வழங்கியுள்ளது.
வங்கியின் நிறுவன மற்றும் SME வங்கிச் சேவைக்குப் பொறுப்பான சிரேஷ்ட உப தலைவர் எம்.எம்.எஸ். குவலீத், இந்த நன்கொடைத் தொகுதியை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அசேல குணவர்தனவிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில் வங்கியின் வைப்புப்பிரிவின் தலைவர் அர்ஷாட் ஜமால்தீன், நிறுவனத் தொடர்பாடல்கள், சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஆஸிம் ராலி ஆகியோரும் வைத்தியசாலையின் மருத்துவ ஆலோசகர்கள், மருத்துவத் தாதிகள் வங்கியின் அலுவலர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
வங்கியின் சிரேஷ்ட உப தலைவர் குவலீத் கருத்து தெரிவிக்கையில், “களுபோவில போதனா வைத்தியசாலையுடனான நல்லுறவைத் தொடர்ந்து பேணுவதில் மகிழ்ச்சியடையும் நாம், எமது சமூகநல சேவைத் திட்டத்துக்கு அமைவாக சிறுவர்களின் நலனுக்கு எம்மாலியன்ற உதவிகளைச் செய்ய எம்மை அர்ப்பணித்துள்ளோம். நாம் வழங்கியுள்ள உபகரணங்கள் இந்த வார்ட்டின் அன்றாட அலுவல்களை மேலும் சிறப்பாகச் செய்வதற்கு உதவுமென நம்புகின்றோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago