2025 மே 19, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் முதலாவது மிதக்கும் சூரிய மின்பிறப்பாக்கும் நிலையம்

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நோர்வே அரசாங்கத்தின் உதவியுடன், இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின்பிறப்பாக்கும் நிலையம் கிளிநொச்சியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. 42 கிலோவாற்று மின்சாரத்தை பிறப்பிக்கும் ஆற்றலை இந்த மிதக்கும் நிலையம் கொண்டுள்ளது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இந்த நிலையம் நிறுவப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மற்றும் வெஸ்டர்ன் நோர்வே யுனிவர்சிட்டி ஒஃவ் அப்லைட் ஸ்டடீஸ் ஆகியவற்றினால் 2017 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டிருந்த ஆய்வுகளின் பெறுபேறாக இந்த திட்டம் சாத்தியமாகியுள்ளதுடன், இதற்கான உதவிகளை கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் வழங்கியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X