Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜனவரி 31 , மு.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் கொமர்ஷல் வங்கிக்கு, இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் (SLIM) 2024 வர்த்தக நாம சிறப்பு விருதுகளில், இலங்கையின் 'ஆண்டின் பசுமை வர்த்தக நாமத்திற்காக' தங்க விருது வழங்கப்பட்டுள்ளது. நிலைபெறுதகு தன்மைக்கான வங்கியின் அர்ப்பணிப்புக்கு பொருத்தமான அங்கீகாரமாக இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொமர்ஷல் வங்கியானது தனது சொந்த செயற்பாடுகளுக்கு அப்பால் நாடு முழுவதிலும் உள்ள சமூகங்களை முன்னிறுத்தி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முயற்சிகளை உள்ளடக்கிய நிலையில் நிலைபெறுதகு தன்மையை மேம்படுத்துவதில் மேற்கொண்டுள்ள கணிசமான முதலீடுகள் மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்த விருதானது அங்கீகரிப்பதாக உள்ளது.
இந்த நிலைபெறுதகுதன்மைக்கான திட்டங்களில் 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட வங்கியின் 'தேசத்திற்கான மரங்கள்' திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 100,000 மரங்களை நடும் செயற்திட்டமானது 12 மாதங்களில் பூர்த்தி செய்யப்பட்டமை மற்றும் இன்னும் மேலதிகமாக 100,000 மரங்களை நடுவதற்கான வங்கியின் உறுதிப்பாடு என்பவை முக்கியமானவை.
இலங்கையின் முதல் கார்பன் நடுநிலை வங்கியாக 2021 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டு சாதனையை பதிவு செய்த கொமர்ஷல் வங்கியின் நிலைபெறுதகு தன்மைக்கான பயணம் 25 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டதுடன் மற்றும் கடந்த நான்கு ஆண்டுகளில் இம்முயற்சியானது சீரான கதியில் இடம்பெற்று வருகிறது. இது வங்கிக்கும் நாட்டிற்கும் பல நிலைபெறுதகு தன்மையுடன் இணைக்கப்பட்ட திட்டங்களை உருவாக்கியுள்ளது.
SLIM ஆண்டின் பசுமை வர்த்தக நாமத்திற்கான விருதுக்காக மதிப்பிடப்பட்ட ஆண்டில், கொமர்ஷல் வங்கி தனது CO2 உமிழ்வை மேலும் 233,918 தொன்களால் குறைத்ததுடன் காகித பயன்பாட்டை 47.57% குறைத்தது, 286,240 கிலோ காகிதத்தை மீள் சுழற்சி செய்தது. அத்துடன் சூரிய சக்தியால் இயங்கும் கிளைகளின் எண்ணிக்கையை 82 ஆக அதிகரித்தது.
இந்த ஆண்டில் ஏனைய குறிப்பிடத்தக்க சாதனைகளில் இலங்கையின் முதல் பசுமை வீட்டுக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியமை மற்றும் அதன் முதன்மையான ComBank Digital செயலிக்காக 1 மில்லியன் வாடிக்கையாளர்களைத் தாண்டி, நிலையான வங்கியியல் நடைமுறைகளை ஊக்குவித்தமை என்பன அடங்கும்.
கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை வங்கியாகும், மேலும் கொழும்பு பங்குச் சந்தையில் வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச வலையமைப்பைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 வங்கிக்கிளைகள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான முதற்தர வங்கி ஆகியவையாகும்.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025