Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 20 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கியின் 100 ஆண்டு கால சேவை நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்வுகளில் ஒன்றாக இந்து சமய நிகழ்ச்சியும் இடம்பெற்றது. நாட்டுக்கும் கொமர்ஷல் வங்கிக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும், அதன் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தவர்களுக்கும் தெய்வ ஆசி வேண்டி மருதானை ஸ்ரீ கைலாசநாதர் தேவஸ்தானத்தில் அபிஷேக பூஜைகள் உட்பட இந்த சமய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வங்கியின் தலைவர் தர்மா தீரசிங்க, முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ரெங்கநாதன், பிரதம செயற்பாட்டு அதிகாரி சனத் மனதுங்க, ஏனைய பணிப்பாளர்கள், சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் முன்னாள் இந்நாள் ஊழியர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இவ்வாண்டு ஏற்ெகனவே 4,000த்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் ஒன்று கூடல் மற்றும் பௌத்த, கிறிஸ்தவ சமய நிகழ்ச்சிகள் என்பன கொமர்ஷல் வங்கியின் நூற்றாண்டை முன்னிட்டும் அதன் முன்னோடிகளை நினைவு கூறும் வகையிலும் இடம் பெற்றுள்ளன. பங்குதாரர்களைப் பாராட்டும் நிகழ்வு, 100 பாடசாலைகளுக்கு நன்மை அளிக்கும் வகையிலான நாடு தழுவிய சமூக நல மேம்பாட்டுத் திட்டங்கள், பாரிய அளவிலான காடு வளர்ப்புத் திட்டம் என்பன 2020ம் ஆண்டு கலண்டரில் வங்கியின் நூற்றாண்டை முன்னிட்டு அமுல் செய்யப்பட உள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago