2025 மே 09, வெள்ளிக்கிழமை

கொமர்ஷல் வங்கியின் தலைமையகத்தில் புதிய கிளை

Freelancer   / 2025 மே 02 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொமர்ஷல் வங்கியானது தனது 'வெளிநாட்டு வங்கிக் கிளையை’, 'கூட்டாண்மை கிளையாக' மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. வங்கி கூட்டாண்மை மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு அர்ப்பணிப்பான, பரந்த நிதித் தீர்வுகளை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக இந்தச் செயற்பாடு அமைந்துள்ளது.

இந்த மாற்றமானது வங்கியின் பயணத்தில் ஒரு புதிய மைல்கல்லை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், பிராந்தியத்தில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக நீண்ட காலமாக செயல்பட்டு வரும் கொழும்பின் வளமான வர்த்தக பாரம்பரியத்துடன் ஒன்றிப்பதாகவும் உள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

இல. 21, கொமர்ஷல் ஹவுஸ், கொழும்பு 1, சேர் ரசீக் ஃபரீத் மாவத்தை (பிரிஸ்டல் வீதி) அமைந்துள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள இந்த மீளநாமமிடப்பட்ட கூட்டாண்மைக் கிளையானது, இலங்கையில் முதன்முதலாக நிறுவன வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட ஒரு முதன்மையான நிதி நிலையமாகத் திகழ்வதாக வங்கி தெரிவித்துள்ளது. இந்த மாற்றமானது இணையற்ற சேவைச் சிறப்பு, தனிப்பயனாக்கப்பட்ட நிதியியல் தீர்வுகள் மற்றும் நீண்டகால வர்த்தக பங்குடைமைகளை வளர்த்தல் என்ற வங்கியின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்ததாகவுள்ளது.

இந்த மூலோபாய முயற்சி குறித்து கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க, 'எங்கள் தலைமை அலுவலகம் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க டெல்ஃப்ட் நுழைவாயில், டச்சு கோட்டைக்கு வழிவகுத்தது போல, எமது வங்கிக் கிளையும் இலங்கையின் எல்லைகளுக்கு அப்பால் நீடித்த மற்றும் வளமான வர்த்தக ஒத்துழைப்புகளின் புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்பது எமது நம்பிக்கையாகும்,' என்று கூறினார்.

தடையற்ற வங்கி அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கூட்டாண்மைக் கிளையானது, விரிவான வர்த்தக நிதி, திறைசேரி சேவைகள், வெளிநாட்டு வங்கியியல், பிற தனிப்பயனாக்கப்பட்ட நிதியியல் தெரிவுகள் மற்றும் நிபுணர் ஆலோசனை ஆதரவு உள்ளிட்ட விரிவான நிதியியல் தீர்வுகளை வழங்குவதுடன் மேலும் உறவு அடிப்படையிலான வங்கிச் சேவையில் புதுப்பிக்கப்பட்ட கவனத்தையும் செலுத்தவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X