Freelancer / 2025 ஜூன் 23 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கி, ஷரியாவுக்கு இணக்கமான வங்கி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நாடும் வாடிக்கையாளர்களின் வசதி கருதி புறக்கோட்டை பிரதான வீதியில் உள்ள அதன் கிளையில் ஒரு பிரத்தியேக இஸ்லாமிய வங்கி சேவைப் பகுதியை திறந்துள்ளது.
இது கொமர்ஷல் வங்கியால் அமைக்கப்படும் மூன்றாவது இஸ்லாமிய வங்கி;ச் சேவை நிலையமாகும். வங்கியின் இஸ்லாமிய வங்கிப் பிரிவின் பிரதான கிளையானது கொழும்பு 01 இல் உள்ள கொமர்ஷல் வங்கியின் நகர அலுவலகக் கட்டிடத்தில் அமைந்துள்ளது, அதே வேளை மற்றுமொரு பிரத்தியேக இஸ்லாமிய வங்கி சேவைப்பகுதி மட்டக்களப்பில் உள்ள காத்தான்குடியில் உள்ள கிளையில் இயங்குகிறது.
இந்த சேவைப்பகுதிகளில், கணக்கு ஆரம்பித்தல், கடன் வசதிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய வங்கி சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும். மேலும், ஷரியாவுக்கு இணக்கமான வங்கி மற்றும் முதலீட்டு தயாரிப்புகளைத் தேடும் வாடிக்கையாளர்களின் மத நம்பிக்கைகளுக்கு இணங்க வடிவமைக்கப்பட்ட வங்கி தயாரிப்புகள் பற்றி நன்கு அறிந்த ஊழியர்களை கொண்டு இயங்குகின்றன.
கொமர்ஷல் வங்கியினால் அல் அதலா இஸ்லாமிய வங்கிச் சேவையின் கீழ் வழங்கப்படும் தயாரிப்புகளில் வாடியா யாத் தமான் நடைமுறைக் கணக்கு; முதரபா சேமிப்புக் கணக்கு, முதரபா முதலீடுகள், குறைந்து வரும் முஷாரகா, முராபஹா மற்றும் முசாவமா, இஜாரா குத்தகை மற்றும் இறக்குமதி நிதியுதவி ஆகியவை அடங்கும்.
இந்த தயாரிப்புகள் அனைத்தும் வங்கியின் ஷரியா சபையின் வழிகாட்டுதலின் கீழ் வழங்கப்படுவதுடன் இந்த சபையில் அனைத்து பரிவர்த்தனைகளும் ஷரியாவின் கொள்கைகளுக்கு மற்றும் அளவுருக்களுக்கு இணங்குவதை உறுதிசெய்யக்கூடிய இஸ்லாமிய நீதித்துறையின் சிறந்த நிபுணர்கள் உள்ளனர்.
உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026