2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கொமர்ஷல் வங்கியின் வீட்டுக் கடன் திட்டம் மீண்டும் அறிமுகம்

Freelancer   / 2025 செப்டெம்பர் 13 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகக் குறைந்த சந்தை வட்டி வீதங்கள், விநியோகஸ்தர்களுக்கு 40% வரையிலான விலைக்கழிவுகள், ஆவணக் கட்டணங்களில் 50% சலுகைகள் மற்றும் செப்டெம்பர் 30 வரையான நெகிழ்வான மீளச்செலுத்துவதற்கான தெரிவுகள் போன்றவற்றுடன், வீட்டுக் கடன் திட்டத்தை கொமர்ஷல் வங்கி மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வீட்டுக்கடன் திட்டம், வாடிக்கையாளர்களுக்கு தமது கனவு வீடுகளை நிர்மாணிப்பதற்கு, கொள்வனவு செய்வதற்கு அல்லது புதுப்பிக்க உதவும் வகையில் கவர்ச்சிகரமான வட்டி வீதங்களுடன், கிரயச்சேமிப்பு மற்றும் பிரத்தியேகமான மீள் செலுத்தும் திட்டங்களை வழங்குகிறது. செப்டெம்பர் 30, 2025 வரை மேற்கொள்ளப்படவுள்ள இந்த ஊக்குவிப்புத் திட்டமானது, பரந்த அளவில் கடன் பெற்றுக்கொள்பவர்களுக்கு வீடொன்றினை சொந்தமாக்கிக் கொள்வதற்காக மிகவும் நியாயமான விலையிலும் மற்றும் இலகுவில் அணுகக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், அனைத்து வாடிக்கையாளர்களும் ஆவணக் கட்டணங்களில் 50% விலைக்கழிவுடன் பிளாட்டினம் வட்டி வீதத்தை அனுபவிப்பார்கள். மேலும், வீடமைப்பு நிர்மாண நோக்கங்களுக்காக கடன் பெறுபவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து கட்டிடப் பொருட்கள், குளியலறை பொருத்துதல்கள், மற்றும் இதர பொருட்களுக்கு 40% வரை விலைக்கழிவினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஒருவரின் தேவை, வருமானம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு வங்கியின் ஆலோசனைக்கிணங்க ரூ. 50 மில்லியன் வரை கடன்கள் வழங்கப்படும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள், நிரந்தர வதியும் உரிமையை (PR) வைத்திருப்பவர்கள் மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் திருப்பிச் செலுத்தக்கூடிய இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் ஆகியோருக்கும் வெளிநாட்டு நாணய வீட்டுக் கடன்களும் வழங்கப்படுகின்றன.

அனைத்து தேவையான ஆவணங்களும் கிடைக்கப்பெறும் பட்சத்தில் மூன்று வேலை நாள்களுக்குள் கடனிற்கான ஒப்புதல் வழங்கப்படும் என்றும், வங்கியின் விரைவான வீட்டுக்கடன் திட்டத்தின் (Speed Home Loan scheme) கீழ் 14 நாள்களுக்குள் கடன்தொகை வழங்கப்படும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் முதல் முறையாக வீடு ஒன்றினை நிர்மாணிப்பதற்கு அல்லது கொள்வனவு செய்வதற்கு கடன் பெறுபவர்களுக்கு இலவச குறைந்து வரும் காப்புறுதி திட்ட வசதி (Decreasing Term Assurance Policy - (DTAP) வழங்கப்படும், இது அவர்களின் கடன்களை எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது.

இந்த வீட்டுக்கடன் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தமது விருப்பத்திற்கேற்ப தவணைக்கட்டணங்களைச் செலுத்தும் முறைகளை தெரிவு செய்து கொள்ள முடியும். அவற்றில் Step Up வீட்டுக் கடன்கள் மூலம் குறைவான தவணைக்கட்டணங்களில் தொடங்கி   வருமானத்திற்கு ஏற்ப படிப்படியாக அதிகரிக்கும் வசதி, Residual வீட்டுக் கடன்கள், மூலம் கடன்தொகையின் ஒரு பகுதியை தவணைக்காலத்தில் திருப்பிச் செலுத்தி மீதமுள்ள தொகையை பின்னர் செலுத்தும் வசதி, மேலும் தொழில்சார் வல்லுநர்கள் மற்றும் அதிக நிகர மதிப்புள்ள தனிநபர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரையான சலுகைக் காலத்துடன் கூடிய கடனை செலுத்தும் வசதி என்பன வழங்கப்படுகின்றன. சமமான மாதாந்த தவணை (EMI) அல்லது குறைந்து செல்லும் இருப்பு முறை (RBM) மூலம் இந்நெகிழ்வான திட்டங்களின் கீழ் பாரம்பரிய கடன் அளவுகோல்களைப் பூர்த்தி செய்யாதவர்களுக்குப் பாரிய கடன் தொகைகளை வழங்க உதவுவதாக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வீட்டுக்கடன் ஊக்குவிப்புத் திட்டத்தின் மீள் அறிமுகம் தொடர்பாக கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் தனிநபர் வங்கிப்பிரிவு பிரதிப் பொது முகாமையாளர் எஸ். கணேசன், 'கொமர்ஷல் வங்கியின் வீட்டுக் கடன் திட்டமானது வாடிக்கையாளர்களின் நிதி நிலைமையின் தடைகளை நீக்கி அவர்களின் வீட்டு உரிமைக்கான நிதியினை வழங்குவது பற்றியதாகும். மிகக் குறைந்த வட்டிவீதங்கள் விரைவான செயல்முறை, குறிப்பிடத்தக்க கிரயச் சேமிப்பு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மீள் செலுத்தும் திட்டங்களை வழங்குவதன் மூலம், பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் தமது சொந்த வீட்டைப்பெற்றுக் கொள்வதை நாம் சாத்தியமாக்குகிறோம்.' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X