Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 29 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹேமாஸ் குரூப்பின் துணை நிறுவனமான அட்லஸ் அக்சிலியா பிஎல்சி, தனது புத்தாக்க கண்டுபிடிப்பான Automated Guided Vehicle (AGV) ரொபோ இயந்திரத்தை ஹோமகம ஆதார வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
COVID-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சைகளை வழங்கப் போராடும் மருத்துவக் குழுவினருக்கு உதவியாக, இந்த ரொபோ இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ரொபோ இயந்திரத்தின் தொழில்நுட்பத்தை, நாட்டில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இது போன்ற சாதனங்களை தயாரிக்க ஆர்வமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அல்லது நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராகவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், ஹோமகம ஆதார வைத்தியசாலையில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், மருத்துவ சிகிச்சைகளை வழங்கும் ஊழியர்களுடன் இணைந்து இந்தச் சாதனத்தின் பிரயோகம் தொடர்பான இனங்காணல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளன.
இந்த இயந்திரக் கண்டுபிடிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர். இந்திக ஜாகொட,
“இது போன்றதொரு இயந்திரமொன்றை உள்நாட்டு நிறுவனமொன்று வடிவமைத்துள்ளமை உண்மையில் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும். இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மேன்மையான தொழில்நுட்ப அபிவிருத்தி அம்சங்களை பயன்படுத்த வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இது போன்ற சாதனங்களினூடாக, சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் தம்மை நோய்த் தொற்று ஆபத்துக்கு வெளிப்படுத்தாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். அத்துடன் COVID-19க்கு எதிராக போராடுவதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அனுகூலமாக அமைந்துள்ளது” என்றார்.
இந்த ரோபோ இயந்திரத்தினால், நோயாளர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருள்களைக் கொண்டு சென்று வழங்க முடியும் என்பதுடன் வெப்பநிலை அளவீடு போன்ற அடிப்படை மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும். அத்துடன் வைத்தியர்களுக்கு ஒரு இடத்திலிருந்தவாறு நோயாளிகளை கண்காணிக்கக்கூடியதாக இருக்கும்.
இந்த ரோபோ இயந்திரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கமரா ஊடாக அவர்களுடன் தொடர்பாடல்களை பேணக்கூடியதாக இருக்கும். மேலும், வயர்லெஸ் சார்ஜிங் ஊடாக, இந்த ரொபோ தன்னை சுயமாக சார்ஜ் செய்து கொள்ளும். இதனால் சுகாதார பராமரிப்பு பணியாளர்கள் இதன் அருகில் செல்ல வேண்டிய தேவை குறைக்கப்படுகின்றது. எனவே, இந்த ரோபோ பயன்பாட்டினூடாக, நோயாளர் கண்காணிப்பு தன்னியக்கமயப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதார பராமரிப்பு பணியாளர்களுக்கு தமது நிபுணத்துவத்தை பயன்படுத்தி இடர்கள் நிறைந்த சூழலில் பாதுகாப்பாக உயிர்களை காக்கக்கூடியதாக இருக்கும்.
இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்த அட்லஸ் அக்சிலியா பிரதம நிறைவேற்று அதிகாரி அசித சமரவீர,
“COVID-19 பரவல் காரணமாக எமது மருத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் இன்றைய சூழலில் எதிர்நோக்கும் சவால்களுக்கு எமது அணியினரால் தீர்வொன்று வடிவமைக்கப்பட்டுள்ளதையிட்டு நான் மிகவும் பெருமை கொள்கின்றேன். COVID-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இந்த புத்தாக்கத்தை நாம் பகிர்ந்து கொள்கின்றௌம். COVID-19 நோயாளர்களுக்கு மாத்திரம் சிகிச்சையளிக்கும் ஹோமகம வைத்தியசாலைக்கு இந்த ரோபோ இயந்திரத்தை நாம் நன்கொடையாக வழங்கியுள்ளோம்” என்றார்.
“60 வருடங்களுக்கு மேலாக தேசிய ரீதியில் சேவைகளை வழங்கி வரும் நிறுவனம் எனும் வகையில், நாட்டில் முதலிடுவதனூடாக தேசத்தின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்கி வருகின்றோம். எமது அணியால் மேற்கொள்ளப்பட்ட இந்தப் புத்தாக்கம், அவசரத் தேவை காணப்படும் ஒரு தருணத்தில் எம்மால் சிறந்த பங்களிப்பை வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது. இந்த நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு எமது சுகாதார துறையைச் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு வழங்குவதாக அமைந்திருக்கும்” என்றார்.
வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் போது தற்போது சுகாதார ஊழியர்கள் Personal Protective Equipment (PPE) அங்கியை பயன்படுத்துகின்றனர். இது அவர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது. இந்த ரோபோ இயந்திரத்தின் கண்டுபிடிப்பினூடாக, இந்த சுமை பெருமளவு குறைக்கப்படும் என்பதுடன், அத்தியாவசியமான நிலைகளின் போது மாத்திரம் சுகாதார துறையைச் சேர்ந்தவர்களுக்கு நோயாளர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்த வேண்டியிருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
6 hours ago