2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொவிட்-19: யாழ்ப்பாண மருத்துவபீட மாணவர்களின் பங்களிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 12 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்பு நிறைந்த மனிதாபிமான செயற்பாடுகள் உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அன்பு விலைமதிப்பற்றது. இவ் அன்பு நிறைந்த செயற்பாடுகள் Covid-19ஐ அழிக்காவிட்டாலும் எத்தனையோ மக்களின் வாழ்வியலை மேம்படுத்தி மனிதாபிமானம் என்ற அடிப்படையில் ஒருவரை ஒருவர் இணைக்கிகொரோனா வைரஸின் தாக்கத்தால் மனிதாபிமானம் மங்கி இருக்கின்ற இந்த காலப்பகுதியில் நேர்மறையான மனப்பாங்கை கண்டறிவது கடினமாக இருக்கும்.

இது போன்ற அனர்த்தங்கள் மனிதாபிமானத்தின் வீழ்ச்சியை உருவாக்கும் என்பதை அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடையாத நாடுகளில் பற்பல உதாரணங்கள் மூலம் நாம் கண்டுவிட்டோம். ஆனால், இது எம்முள் இருக்கும் சிறந்த பண்புகளை வெளிக்கொணர்ந்து அச்சம் சூழ்ந்த இக்காலப்பகுதியில் மகிழ்ச்சியை உண்டாக்கும் என்பதற்கும் உலகெங்கும் பற்பல உதாரணங்கள் உள்ளன.  

ஏனைய நாடுகளை போன்று இலங்கை வாழ் மக்களும் coronavirus இன் காரணமாக பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார்கள். இத்தொற்று நோயின் பரவுகையைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் March 20 ஊரடங்கை அமுல்படுத்தியது . இது தொடர்ந்தும் பலநாள்கள் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது நாட்டு மக்கள் அனைவரையும் பல்வேறு விதங்களில் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக  ஏழை  மக்களும்  தினக்கூலி ஊழியர்களும் தமது குடும்பத்துக்கு தேவையான அடிப்படை பொருள்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலைமை யாழ் மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கும் நேர்ந்துள்ளது.

யாழ்ப்பாண மருத்துவபீட மாணவர்களின் பங்களிப்பு

இத்தகைய நிலையில் தன்னலமற்ற வெளிப்பாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருகிறது. யாழ். மக்களின் தேவையை ஆரம்பத்திலேயே உணர்ந்த சில யாழ். மருத்துவபீட சிரேஷ்ட மாணவர்கள், சுயமாக முன்வந்து, முதலில் தாமாகவும் பின் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளுடன் இணைந்தும் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதன் மூலம் திரட்டப்பட்ட பணத்தினைக்கொண்டு, விநியோகிப்பதற்கு தேவையான உலர் உணவுகளை கொள்வனவு செய்து பிரதேச செயலாளர்கள், கிராமசேவகர்கள் மற்றும் MOHகளின் உதவியுடன் கஷ்டப்படும் குடும்பத்தவர்களை இனங்கண்டு அத்தியாவசியப்பொருள்களை வழங்கி வருகிறார்கள். 

இன்றைவரை வெவ்வேறு இடங்களில் உள்ள 1,500 குடும்பங்களுக்கு உதவியுள்ளார்கள். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் 20th March ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட 3 நாள்களுக்குள்ளேயே அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதாகும். விநியோகத்தில் ஈடுபட்ட மாணவர்கள் Corona மூலம் தமக்கு ஆபத்து உள்ளது என தெரிந்தும், முறையாக முற்காப்புகளை செய்து தமது பாதுகாப்பையும் ஏனையோரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி இதனை செய்து வருகின்றனர். சில மருத்துவ பீட மாணவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களிலும் உதவியுள்ளார்கள் என்பதை இங்கு குறிப்பிடவேண்டும். 

இதற்கு மேலதிகமாக மருத்துவபீட மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு  தேவையான  மருந்துகளை வினயோகிப்பதிலும்  உதவி புரிகின்றார்கள். நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை அடுக்கி பொதி செய்து ஆம்புலன்சில் அனுப்ப உதவி புரிகின்றார்கள். தகவல் வேண்டி அழைப்பு விடுக்கும் மக்களுக்கும் தேவையான தகவல்களை வழங்குவதற்கு  சுகாதார அமைச்சுக்கும் உதவியுள்ளார்கள்.

பல்கலைக்கழக  மாணவர்கள் எங்கள் நாட்டில் சில வேளைகளில் சில காரணங்களுக்காக தவறாக செய்திகளில் சித்தரிக்கப்படுகின்றார்கள். அண்மையில் பகிடிவதையில் படுகாயம் அடைந்த மாணவனின் சம்பவம் ஓர் உதாரணமாகும். இவற்றுக்கு மத்தியில் சமூக அக்கறை மிக்க, தம் சொந்த நலனை புறப்படுத்தி சேவை செய்யும் இம்மாணவர்களை பார்ப்பதில் பெருமையாக உள்ளது.

சுயமாக முன்வந்து நிதிகளை திரட்டி, தாமாகவே பொருள்களைக் கொள்வனவு செய்து, அதை பொதி செய்து  ஊரடங்கின் ஆரம்ப காலம் முதல் தாமாகவே தேவையான இடங்களில் விநியோகம் செய்து வருகிறார்கள். இவ்வாறான, எமது மாணவர்களால் மட்டுமன்றி, நாட்டின் மற்றய இடங்களிலும் கொடுக்கப்படும் உதவிகள் எமது சமூகத்தின் எதிர்காலத்துக்கு நம்பிக்கையை கொடுக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் பாராட்டுக்குரியவையாகவும் முன்மாதிரியாகவும் ஏனைய மக்களுக்கு உத்வேகத்தை கொடுப்பதாகவும் அமைகின்றது.

“காலத்தினாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது”

-டொக்டர் தயாலன் அம்பலவானர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X