2025 மே 17, சனிக்கிழமை

கொவிட்-19க்குப் பின்னர் சந்தை வளர்ச்சியை எதிர்பார்க்கும் vivo

Editorial   / 2020 ஜூன் 12 , பி.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில், கொவிட்-19 இற்குப் பின்னர், எதிர்காலத்தில் விற்பனை நடவடிக்கைகள் தொடரும் என்பதில், vivo நம்பிக்கையுடன் உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், நுகர்வோரின் தேவையைப் புரிந்துகொள்ளவும் புத்துருவாக்கத்தில் ஈடுபடவும் இந்த நேரத்தை நிறுவனம் பயன்படுத்துகிறது. கொவிட்-19 இன் பின்னர், நுகர்வோரின் தேவைகள் மேலும் வளர்ச்சியடையும் என்பதில் vivo நம்பிக்கையாக உள்ளது.

''கொரோனா வைரஸ் தொற்று நோயால், நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் கூட, ஓர் உறுதியான வர்த்தக நாமமாக, வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு எந்தவித இடையூறும் இன்றி, சேவை செய்ய முடியும் என்பதில், நாங்கள் திடமாக உள்ளோம். எங்களிடம், வலுவான குழுவொன்று உள்ளதுடன், எங்கள் உள்நாட்டுப் பங்காளர்களுடன் இணைந்து, நிலைமை இயல்பானதாக மாறும் போது, நாம் தொடர்ச்சியாக வளர்ச்சி காணுவோம்'' என vivo Mobile Lanka வின் பிரதான நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .