Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2025 ஜூலை 15 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மேலும் திறம்பட உங்களுக்கு சிறப்பாக சேவை வழங்குவதற்காக ஒன்றிணைந்துள்ளோம்'
கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்தர ஜப்பானிய வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் உலகளாவிய ரீதியில் முன்னணி நிறுவனமான திகழும் கோபே மோட்டார்ஸ் நிறுவனமானது, 1997 முதல், 60க்கும் அதிகமான நாடுகளில் தன்னுடைய சேவையை விஸ்தரித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான கார்கள், லாரிகள், இயந்திரங்கள் மற்றும் படகுகளை வழங்குகி வருகிறது.
ஜப்பானின் யோகோகாமாவை தலைமையகமாகக் கொண்டு, இலங்கை, பிலிப்பைன்ஸ், கென்யா, தான்சானியா, பாகிஸ்தான், மொரீஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு ராஜ்ஜியம் முழுவதும் தன்னுடைய செயல்பாடுகளைக் கொண்டுள்ள கோபே மோட்டார்ஸ், உலகம் முழுவதும் அவர்களுக்கு கிடைக்க பெற்ற அங்கீகாரத்திற்;கான வெற்றியாக, இணையற்ற வாடிக்கையாளர் சேவையுடன் சிறந்த வாகனங்களை வழங்கும் சேவையை முன்னெடுக்க உறுதிபூண்டுள்ளது.
கோபே மோட்டார்ஸ் தன்வசம் கொண்டுள்ள பாரிய பொருட் கையிருப்புக்கு பெயர்பெற்ற நிறுவனமாக திகழ்கிறது. இதில் 3,000 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் கையிருப்பில் உள்ளதுடன், மேலும் உலகளவில் 100,000 இற்கும் மேற்பட்ட கூடுதல் அலகுகளுக்கான அணுகலையும் கொண்டுள்ளது. ஜப்பானிய ஏலங்களின் கோல்ட் உறுப்பினராக, அவர்கள் போட்டி விலையை உறுதி செய்கின்றனர். 15 மொழிகளில் சரளமாகப் பேசும் KOBE இன் அர்ப்பணிப்புள்ள குழுவினர், உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை வழங்கி, தடையற்ற மற்றும் திறன்மிக்க கொள்முதல் அனுபவத்தை பெற்றுத் தருவதை உறுதி செய்கின்றனர்.
உமர் அலி (தலைவர் - கோப் மோட்டார் நிறுவனம்) மற்றும் ரமித் சரத்சந்திரா (துணைத் தலைவர் - ஆட்டோ மிராஜ் குழுமம்) ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றனர்.
2013 ஆம் ஆண்டில், கோபே மோட்டார்ஸ் ஆனது, பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு முதன்முதலில் பவர்டிரெய்ன் உத்தரவாதத்தை அறிமுகப்படுத்தி இலங்கையில், இத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியது - இது வாடிக்கையாளர்களுக்கு இணையற்ற மன திருப்தியை வழங்கிய ஒரு மைல்கல் முயற்சியாகவும் கருதப்படுகிறது. எஞ்சின், டிரான்ஸ்மிஷன் மற்றும் ஹைப்ரிட் அமைப்புகளை உள்ளடக்கிய இந்த உத்தரவாதம் பூஜ்ஜிய பிரீமியத்தில் வழங்கப்படுவதுடன், இது வெளிப்படைத்தன்மை மற்றும் தரத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
தற்போது, இலங்கையில் வாகன இறக்குமதி தடை நீக்கப்பட்டதன் பின்னர், கோபே வாகன இறக்குமதி விற்பனை 2,500 இற்கும் அதிகமான எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளது. இது பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துவதுடன், உத்தரவாத சலுகைகளுடன் இணைந்து, அனைவருக்கும் மன நிறைவையும் தொந்தரவு இல்லாத அனுபவத்தையும் வழங்குகிறது. கோபே மோட்டார்ஸ் என்பது வாகனத் துறையில் ஒரு நம்பகமான வர்த்தக நாமமாகும், இங்கு நீங்கள் நம்பகத்தன்மை, செயற்திறன் மற்றும் சிறப்பான சேவையையும் அனுபவிக்க முடியும்.
உமர் அலி (தலைவர் - கோப் மோட்டார் நிறுவனம்) கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
ஆட்டோ மிராஜ் - 1994 முதல் இலங்கையில் ஆட்டோமொடிவ் சேவைத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஓர் வர்த்தக நாமமாகும். ஆட்டோ மிராஜ் வாகன சேவை, இயந்திர பழுதுபார்ப்பு, மோதல் பழுதுபார்ப்பு மற்றும் பலவற்றில் உலகளவில் தனக்கென ஓர் தனித்துவத்தை பெற்றுள்ளது. சிறப்பான செயற்பாட்டிற்கான தொடர் அர்ப்பணிப்பு, 2004 ஆம் ஆண்டில் ஆட்டோ மிராஜ் UK இனை அறிமுகப்படுத்த வழிவகுத்தது, இது நிபுணத்துவத்தை உலகம் முழுவதும் விரிவுபடுத்துவதற்கான அடித்தளமாகியது.
40க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் அர்ப்பணிப்புள்ள பணியாளர்களுடன், ஆட்டோ மிராஜ், டயர் மற்றும் பேட்டரி தீர்வுகள், வாகன பழுதறிதல் மற்றும் எரிபொருள் சேவைகள் உள்ளிட்ட அதிநவீன சேவைகளை வழங்குகிறது. உலகப் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களான KIA, Mobil மற்றும் Toyota உடன் கைகோர்ப்பதில் பெருமைகொள்வதுடன், மேலும் இலங்கை சந்தைக்கு பிரீமியம் Lukoil லூப்ரிகண்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆட்டோ மிராஜ் நிறுவனமானது, 2022 ஆம் ஆண்டில், வாகன மாற்றங்கள், செயல்திறன் மேம்பாடுகள் மற்றும் தனிப்பயனாக்கங்களுக்கான மையமான "Ramdane" ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் தங்கள் பனித்தொகுப்பை விரிவுபடுத்தியது. மேலும், நீராவி தொழில்நுட்பத்தின் முன்னோடியாக வாகன விவரக்குறிப்பு மற்றும் பிரத்தியேக ஹம்மர் பிளீட் ஆகியவை அதன் சிறப்பிற்கான ஓர் சான்றாகியது.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதிலும், சிறந்த சேவை மற்றும் உயர்தர தயாரிப்புகளுடன் வாகனத்திற்கு உகந்த செயற்திறனை உறுதி செய்வதிலும் அதிக கவனம் செலுத்துகின்றது. அனைத்து ஆட்டோ பராமரிப்பு தேவைகளுக்கும் வெளிப்படையான தேர்வாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், ஒவ்வொரு விடயத்திலும் புதுமை மற்றும் சிறப்பினை சேர்த்து செயற்பட்டு வருகிறது.
கோபே மோட்டார்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு: கோபே மோட்டார்ஸ் நிறுவனம், ஆட்டோ மிராஜ் நிறுவனத்தை அதன் அங்கீகரிக்கப்பட்ட நாடு தழுவிய சேவை பங்காளராக அறிவித்துள்ளது. இலங்கை வாகன உரிமையாளர்களுக்கு இணையற்ற மதிப்பையும் மன நிறைவையும் வழங்குவதே இந்த இணைப்பின் நோக்கமாகிறது. சிறந்த அனுபவத்துடனும் வாடிக்கையாளர் தேவைகளைப் புரிந்துகொண்டும், ஒவ்வொரு இலங்கையருக்கும் இணையற்ற நன்மைகளை வழங்குவதற்காக, இரு உலகப் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களும் ஓர் புரட்சிகரமான மூலோபாய கூட்டணியாக இணைகிறது. ஜப்பானிய வாகன ஏற்றுமதியாளரான கோபே மோட்டர்ஸ் மற்றும் முன்னணி பராமரிப்புக்குப் பிந்தைய சேவை வழங்குநரான ஆட்டோ மிராஜ் இன்று ஒரு புதிய வரலாற்றை உருவாக்க கைகோர்க்கின்றன.
“ஒன்றாக வலுவாக – உங்களுக்கு சிறப்பாக சேவை செய்ய” கூட்டாண்மை அறிவிப்பு
பிரத்தியேக நன்மைகள் குறித்த சிறப்பம்சங்கள்:
• சௌகரியமான KOBE வாகன சேவை முன்பதிவு அமைப்பு:
வாடிக்கையாளர் நட்புறவுமிக்க கோபே வாகன சேவை முன்பதிவு அமைப்பு மூலம் உங்கள் வாகன சேவையை எளிதாக முன்பதிவு செய்துகொள்ள முடியும், இது உங்கள் நேரத்தை முகாமைப்படுத்த உதவுவதுடன், சிரமத்தையும் தவிர்க்கிறது.
• பிரத்தியேக சேவை ஆலோசகர்: ஒரு பிரத்தியேக சேவை:
கோபே வாகனங்களுக்கான ஆலோசகர் மூலம், உங்கள் சேவை அனுபவம் முழுவதும் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதலையும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வீர்கள்.
• கோபே வாகனங்களுக்கான பிரத்தியேக Wash Bay:
கோபே வாகனங்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக Wash Bay இன் வசதியை அனுபவிக்க முடிவதுடன், மேலும் இது அதி சிறந்த பராமரிப்பினை வழங்குவதுடன் அதிக கவனிப்பையும் பெற்றுக்கொள்ள முடியும்.
• ஐரோப்பிய மற்றும் இலத்திரனியல் வாகனங்களுக்கான சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர்கள்:
அதிக பயிற்சி பெற்ற தொழில்நுட்ப நிபுணர்கள் மூலம், ஐரோப்பிய மற்றும் இலத்திரனியல் வாகனங்கள் உட்பட பல்வேறு வகையான வாகனங்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
• அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை:
அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர் பராமரிப்பு சேவை குழுவினர் உங்களுக்கு நட்புறவுமிக்க மற்றும் சிறந்த அனுபவத்தையும், உங்கள் தேவைக்கேற்ப ஒத்துழைப்பினையும் வழங்குவதை உறுதி செய்கின்றனர்.
• பிரத்தியேக உத்தரவாதம் மற்றும் மெருகூட்டப்பட்ட சேவையுடன் முழுமையான வாகன சேவை:
ஆட்டோ மிராஜ் மதிப்பு மெருகூட்டப்பட்ட நன்மைகளுடன் விரிவான வாகன சேவையையும் வழங்குகிறது, இது ஒரு அடிப்படை சேவையை விட மேலதிக சேவையை நீங்கள் பெற்றுக்கொள்வதை உறுதி செய்கிறது. இந்த சேவைகளுக்கு மேலதிகமாக பிரத்தியேக உத்தரவாதங்களின் மூலம் மன நிறைவையும் வழங்குகிறது.
• மேம்படுத்தப்பட்ட ஆட்டோமோட்டிவ் கருவிகள் மற்றும் தொழில்நுட்பம்:
ஒவ்வொரு பழுதுபார்ப்பு மற்றும் சேவையும் துல்லியமாகவும் திறமையாகவும் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய ஆட்டோ மிராஜ் அதிநவீன கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
• ஆட்டோ மிராஜ் 360° Electric Wash:
ஆட்டோ மிராஜ் ஒரு புதுமையான 360° Electric Wash ஐ வழங்குகிறது, இது உங்கள் வாகனம் முழுமையான மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.
இவை அனைத்தும் ஒருங்கிணைந்த சிறந்து சலுகைகளுடன், கோபே மோட்டார்ஸ் மற்றும் ஆட்டோ மிராஜ் ஒரு வாகனத்தை கொள்வனவு செய்வதை தாண்டிய தனித்துவமிக்க உரிமை அனுபவத்தை வழங்குகின்றன. மேம்படுத்தப்பட்ட வாகன பராமரிப்பு, பிரத்தியேக நன்மைகள் மற்றும் இணையற்ற நிபுணத்துவத்துடன், உங்கள் கோபே வாகனம் சிறந்த கைகளில் இருப்பதை நீங்கள் நம்ப முடியும்.
கோபே மோட்டர்ஸ் மற்றும் ஆட்டோ மிராஜ் - 'ஒன்றாக இணைந்து வலிமை பெற்று - சிறந்த சேவை வழங்க காத்திருக்கிறது'
மேலதிக விபரங்களுக்கு : திரு. நபில் ஃபாஸ்ரி (0755 – 352 706)
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago