2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சிங்கப்பூர் குடிமனைகளின் விலையில் வீழ்ச்சி

Gavitha   / 2016 ஒக்டோபர் 05 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கப்பூரில் வீடொன்றை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியென்றால் தற்போது சிங்கப்பூரில் நிலவும் குடிமனைகளுக்கான விலை வீழ்ச்சி சூழ்நிலையை சாதகமாக்கிக்கொண்டு, உங்களுக்கென ஒரு வீட்டை வாங்கிக்கொள்ளலாம்.   

 

தொடர்ச்சியான 12ஆவது காலாண்டாக சிங்கப்பூரில் குடியிருப்புகளின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டிலிருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த மூன்றாம் காலாண்டில் குடியிருப்புகளின் விலைகள் 1.5 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்ததாகவும், இவ்வாறு சிங்கப்பூரில் குடியிருப்புகளின் விலைகளில் வீழ்ச்சி நிலவும் மிகவும் நீண்ட காலப்பகுதியாக இது அமைந்துள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.   

2013ஆம் ஆண்டில் உச்சக்க கட்டத்தில் காணப்பட்ட குடிமனைகளின் விலைகள் தற்போது சுமார் 10.9 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X