2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சிங்கர் X Series நவீன மடிக்கணினிகள் அன்பளிப்பு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி, சிறப்பானப் பெறுபேறுகளை ஈட்டுகின்ற மாணவர்களை ஊக்குவிப்பதுக்கு முன்வந்துள்ளதுடன், அதன் மூலமாக நாட்டில் கல்வியை முன்னேற்றுவதற்கு தனது பங்களிப்பை வழங்குகின்றது.

அந்த வகையில் கடந்த ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் மிகச் சிறப்பானப் பெறுபேறுகளை ஈட்டி முதல் 12 இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு சிங்கர் X Series நவீன மடிகணினிகளை வழங்கியுள்ளது.  

ஓகஸ்ட் 23 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாணவர்களுக்கு மடிகணினிகளைக் கையளித்திருந்தார். சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் சார்பில் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் மற்றும் விற்பனை மற்றும் வர்த்தகத்துறைப் பணிப்பாளரான மகேஷ; விஜேவர்த்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சிங்கர் X Series மடிகணினிகள்,6th Generation Processor உடனான நவீனIntel Core i5, 4GB RAM, 1TB Hard Disk, 15.6” HD முகத்திரை, DVD RW Drive, உள்ளிணைக்கப்பட்ட HD வெப் கமரா, Multi Card Reader மேம்பட்ட Intel graphic support. Wi-Fii மற்றும்Bluetooth ஆகிய தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த மடிகணினிகள் அனைத்தும் முற்றிலும் புதிய அசல் Windows 10 Operating System இன் வலுவூட்டலைக் கொண்டுள்ளன.

சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரியான அசோக பீரிஸ் அவர்கள் கூறுகையில், 'இலங்கையில் கல்வியை மேம்படுத்துவதில் சிங்கர் எப்போதும் தீவிர உணர்வுடன் செயற்பட்டு வந்துள்ளது. நிறுவனம் என்ற வகையில், இளம் மாணவர்கள் தமது வாழ்வில் பிரகாசிப்பதற்குத் தேவையான அனைத்து சாதனங்கள் மற்றும் வளங்களை வழங்கி, அவர்கள் தமது கல்வி தொடர்பான கனவுகளை நனவாக்கி, மிகவும் போட்டித்திறன் கொண்ட இன்றைய வர்த்தக உலகில் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு சிறந்த முறையில் முகங்கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

நாம் வழங்கியுள்ள மடிக் கணினிகளை இம்மாணவர்கள் மிகவும் பயனுள்ள வகையில் உபயோகித்து, உயர் தர வகுப்புக்களில் கற்று, தொடர்ந்து பட்டப்படிப்புகளையும் சிறப்பாக மேற்கொள்ள தலைப்படுவர் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X