2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சிங்கர் அறிமுகப்படுத்தும் இணைய திருமண பதிவகம்

Gavitha   / 2016 ஜூன் 14 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி, அண்மையில் இடம்பெற்ற விசேட நிகழ்வு ஒன்றில் முதன்முறையாக இணைய திருமண பதிவகம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

மிகவும் பாதுகாப்பான இணைய நுழைமுகம் ஒன்றினூடாக, திருமண ஜோடிகள் உலகின் எப்பகுதியிலிருந்தும், தமது சொந்த திருமண பதிவகத்தை ஆரம்பித்து, நிர்வகிப்பதற்கு சிங்கர் இணைய திருமண பதிவகம் இடமளிக்கின்றது. நீடித்து உழைக்கும் நுகர்வோர் சாதனங்கள் முதல் தளபாட வகை வரை 30க்கும் மேற்பட்ட உற்பத்திப் பிரிவுகளை உள்ளடக்கியவாறு, சிங்கர் சந்தைப்படுத்துகின்ற ஒட்டுமொத்த உற்பத்திகள் மற்றும் வர்த்தக நாமங்களை இது கொண்டுள்ளது. இதன் மூலமாக திருமண ஜோடிகள் தமக்கு தேவையான எந்த உற்பத்தியையும் சௌகரியத்துடன் தெரிவு செய்ய முடியும். சிங்கர் திருமண பதிவகத்தில் இணையம் மூலமாக தம்மை முதலில் பதிவுசெய்து கொள்கின்ற முதல் ஐந்து அதிர்ஷ்டசாலி திருமண ஜோடிகளுக்கு விசேட அன்பளிப்பு கூடைகள் மற்றும் அன்பளிப்பு வவுச்சர்களை சிங்கர் வழங்கவுள்ளது.  

சிங்கர் நிறுவனத்தின் இந்த புதிய வழங்கல் தொடர்பாக தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அந்நிறுவனத்தின் தொழிற்பாடுகளுக்கான பணிப்பாளரான சந்தன சமரசிங்க அவர்கள் கூறுகையில், 'இன்றைய சமுதாயத்தில், திருமண ஜோடிகள் முன்னெப்போதும் இல்லாதவாறு தொழில்நுட்ப மேம்பாடுகளைத் தழுவி வருவதுடன், தமது வாழ்வின் மிக முக்கிய தினத்தை எதிர்கொள்வதில் திருமண பதிவகத்தை இலகுவாக ஏற்படுத்தி, எங்கிருந்தும் இந்தப் பதிவகத்தினுள் நுழைந்து, இலகுவாக இடைத் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியும். பம்பரம் போல் சுழலுகின்ற இன்றைய உலகில், அவர்கள் வேலைப்பளு மிக்க தமது வாழ்வில் திருமணம் தொடர்பான விடயங்களை கவனிப்பதற்கு போதிய கால அவகாசத்தைக் கொண்டிருப்பதில்லை. இதனாலேயே தங்களது விரல் நுனிகளில் திருமண அன்பளிப்புக்களை சௌகரியமாக தெரிவுசெய்வதற்கு, தொழில்நுட்பத்தை உபயோகிப்பதற்கு இந்த இணைய திருமண பதிவகம் மகத்தான சேவையை வழங்கும் என நாம் எண்ணுகின்றோம்.' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X