A.P.Mathan / 2015 ஒக்டோபர் 19 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி நிறுவனத்தின் துணை நிறுவனமான சிங்கர் ஃபினான்ஸ் (லங்கா) பிஎல்சி கிரெடிட் கார்ட்டை சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கிரெடிட் கார்ட் ஒன்றை இலங்கையில் முதன் முதலில் அறிமுகம் செய்யும் வங்கிசாராத நிதி நிறுவனம் எனும் பெருமையை சிங்கர் ஃபினான்ஸ் பெற்றுள்ளது.
வைபவ ரீதியாக இடம்பெற்ற இந்த அறிமுகத்தை தொடர்ந்து, சிங்கர் கிரெடிட் காரட்டை தற்போது வாடிக்கையாளர்களும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
VISA வலையமைப்பினால் வலுவூட்டப்படும் இந்த கிரெடிட் காரட்டை, உள்நாட்டு மற்றும் சர்வதேச விற்பனை நிலையங்கள் ஏற்றுக் கொள்ளும் என்பதுடன், ATM நிலையங்களிலும் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கர் குரூப் பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், 'எமது செயற்பாடுகளின் விஸ்தரிப்பு நடவடிக்கையாக இந்த கிரெடிட் கார்ட் விநியோகம் அமைந்துள்ளது. இலங்கையில் நுகர்வோர் நிதிச் சேவைகளை 1877 ஆம் ஆண்டு முதல் சிங்கர் வழங்கி வருகிறது. சிங்கர் ஃபினான்ஸின் 19 பிராந்திய கிளைகளின் மூலமாகவும், சிங்கர் ஸ்ரீலங்காவின் பாரிய வாடிக்கையாளர் வலையமைப்பு மற்றும் விநியோக வலையமைப்பான 410 கிளைகள் ஊடாகவும் இந்த கிரெடிட் காரட்டை படிப்படியாக விநியோகிப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
முன்னணி வங்கிசாராத நிதி நிறுவனம் எனும் வகையில், சிங்கர் ஃபினான்ஸ் புத்தாக்கமான நிதி தீர்வுகளை வழங்கி வருகிறது. இதற்கேற்றாற் போல் குழுமத்தின் கொள்கைகள் மெருகேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த தீர்வின் மூலமாக வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தக்கூடியதாக அமைந்திருக்கும் என்பதில் சிங்கர் ஃபினான்ஸ் பெருமளவு நம்பிக்கை கொண்டுள்ளது. புதிய கிரெடிட் கார்ட் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு உதவும் வகையிலும் அமைந்திருக்கும்.
சிங்கர் ஃபினான்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சாந்த விஜேவீர கருத்து தெரிவிக்கையில், 'கடந்த ஆண்டுகளில் சந்தை வளர்ச்சியை சிங்கர் ஃபினான்ஸ் பதிவு செய்திருந்தது. அத்துடன், நாட்டின் நிதிக் கட்;டமைப்பின் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பையும் வழங்கியிருந்தது. கிரெடிட் கார்ட் ஒன்றை விநியோகிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியிடமிருந்து அனுமதியை பெற்றுக் கொண்ட முதலாவது அங்கீகாரம் பெற்ற நிதிசார் நிறுவனம் என்பது சிங்கர் ஃபினான்ஸ் நிறுவனத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது' என்றார்.
2004 ஏப்ரல் 19 ஆம் திகதி சிங்கர் ஃபினான்ஸ் (லங்கா) பிஎல்சி தனது வியாபார நடவடிக்கைகளை நிதிசார் சேவைகளை வழங்கும் நிறுவனமாக 1988 ஆம் ஆண்டின் நிதிசார் நிறுவனங்கள் சட்டக் கோவை இல. 78 (காலப்போக்கில் 1991 ஆம் ஆண்டின் சட்டக் கோவை இல. 23 க்கு மாற்றம் செய்யப்பட்டு, 2011 ஆம் ஆண்டு நிதிச் சட்டக் கோவை இல. 42 இன் பிரகாரம் மாற்றீடு செய்யப்பட்டிருந்தது) இன் பிரகாரம் ஆரம்பித்திருந்தது.
கம்பனியின் பிரதான செயற்பாடுகளில் பொது மக்களிடமிருந்து வைப்புகளை பெற்றுக் கொள்வது, குத்தகைகளை பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பளிப்பது, வாடகை கொள்வனவு வசதிகளை வழங்குவது மற்றும் நுகர்வோர் கடன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது போன்றன முன்னெடுக்கப்படுகின்றன. சிங்கர் ஸ்ரீலங்காவின் துணை நிறுவனமான சிங்கர் மெகாவின் சகல வாடகைக் கொள்வனவு செயற்பாடுகளுக்கு நிதிச்சேவைகளை வழங்கும் செயற்பாடுகளை நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago