2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சுற்றுலாத்துறைக்கு Softlogic இன் King Long

Gavitha   / 2016 ஒக்டோபர் 03 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொஃப்ட்லொஜிக் ஒடோமொபைல்ஸ் (பிரைவெட்) லிமிட்டெட், தனது King Long பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் தெரிவுகளில் மத்தியளவு கோச் வகைகளை அறிமுகம் செய்துள்ளது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சஞ்சாரக உதாவ கண்காட்சியின் போது இலங்கையின் உள்ளக சுற்றுப்பயண ஏற்பாட்டாளர்கள் சம்ளேனத்தின் அங்கத்தவர்கள் மற்றும் தற்போதைய King Long வாடிக்கையாளர்கள் முன்னிலையில் இந்த அறிமுக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  

புத்தம் புதிய King Long கோச் மொடலின் பெயர் XMQ6901AY ஆகும். இது 9 மீற்றர் நீளம் கொண்டதுடன், 34 பயணிகள் பயணிக்கக்கூடிய ஆசனங்களைக் கொண்டுள்ளது. இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத்துறைக்கு இது மிகவும் பொருத்தமானது என்பதுடன், உள்நாட்டு பயண ஏற்பாட்டாளர்களுக்கு சொகுசான வாகன தெரிவுகளை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த கோச் 240hp இன்டர்கூல் டேர்போ என்ஜினை கொண்டுள்ளதுடன், நாடு முழுவதிலும் காணப்படும் வௌவேறு பாதைகளுக்கும் காலநிலைகளுக்கும் பொருந்தும் வகையில் அமைந்திருக்கும். நவீன தொழில்நுட்ப உள்ளம்சங்களில் புரொஜெக்டர் வடிவிலான முன்புற ஹெட்லைட்கள், காற்று உதவியுடனான கியர் மாற்றும் கட்டமைப்பு, Eton மற்றும் WABCO பிரேக் கட்டமைப்பு போன்றன கோச் செலுத்தப்படும் போது இனிமையான உணர்வையும் பாதுகாப்பையும் வழங்குவதை உறுதி செய்கின்றன.  

பயணிகளைப் பொறுத்தமட்டில், கோச் முழுமையான பல சொகுசான அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் வாயு குளிரூட்டி, அசைக்கக்கூடிய இருக்கைகள், பிரத்தியேகமான A/C வெளியிடும் பகுதிகள் மற்றும் வாசிக்கும் விளக்குகள், “18” LED TVகள் இரண்டு மற்றும் DVD ப்ளேயர், USB சார்ஜ் செய்யும் போர்ட்கள் மற்றும் போத்தல் குளிரவைக்கும் பகுதிகள் போன்றன அவற்றில் சிலவாகும். மேலும், இந்த கோச்சில் 4.06 சார்ஜ் மீற்றர்கள் வரையான பொருட்களை வைக்கும் பகுதி காணப்படுகிறது. இதில் பெருமளவான பொதிகளைக் கொண்டு செல்லக்கூடியதாகவும் காணப்படுகின்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X