2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக செலிங்கோ லைஃப் தெரிவு

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ லைஃப் தெரிவுசெலிங்கோ லைஃப் நிறுவனம் இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாகத் தொடர்ந்து மூன்றாவது வருடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டு செயற்படும் வேர்ள்ட் பினான்ஸ் சஞ்சிகை செலிங்கோ லைஃப்பின் செயற்பாட்டு குறிகாட்டிகளை மிக ஆழமாகப் பரிசோதித்த பின் இந்தத் தெரிவை அறிவித்துள்ளது.

இந்த சஞ்சிகையின் சர்வதேச நிபுணத்துவம் கொண்ட நடுவர் குழாம் 2015ஆம் நிதி அண்டின் பல்வேறு செயற்பாட்டு குறிகாட்டிகளை இந்தத் தெரிவுக்காக ஆராய்ந்து 2016க்கான தெரிவை அறிவித்துள்ளது. ஒரு காப்புறுதிக் கொள்கையைப் பதிவு செய்து வழங்குவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் சராசரி நேரம், இடர் வாய்ப்பு எவ்வாறு மதிப்பிடப்பட்டு இணைத்துக் கொள்ளப்படுகின்றது, 12 மாத கால மீளாய்வில் நிகழ்த்தப்படும் சாதனை, தற்போது உள்ளவர்களுக்கும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் முறையான காப்புறுதிகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன, வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் விகிதாசாரம், உரிமை கோரல் கொடுப்பனவுக்கு எடுத்துக் கொள்ளப்படும் சராசரி காலம், புதிய வாடிக்கையாளர் சேர்ப்பு விகிதாசாரம், ஒரு காப்புறுதி கொள்கைக்கான சராசரி செலவு மற்றும் தேறிய சந்தா போன்ற விடயங்கள் தெரிவுக்கான மீளாய்வுக்காக கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன.

ஒரு ஆயுள் காப்புறுதி கம்பனியின் திடமான செயற்பாட்டையும் அதன் உற்பத்திகள் மற்றும் சேவைகள் பற்றிய தெளிவான துல்லியமான நிலையையும் எடுத்துக் காட்டுவதாக இவை அமைந்துள்ளன' என்று செலிங்கோ லைஃப்பின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர்.ரெங்கநாதன் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X