Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் LMDஇன் பங்களிப்பில் இடம்பெற்ற Great Place To Work நிறுவனத்தின் 2016 இற்கான இலங்கையின் சிறந்த 25 வேலைத்தளங்கள் மத்தியில் NOLIMIT தெரிவாகியுள்ளது. 14 வணிகத்துறைகளை சார்ந்த 77 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் போட்டியிட்ட இப்பட்டியலில் NOLIMIT இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது மனிதவள முகாமைத்துவம் தொடர்பான NOLIMIT இன் சிறந்த புரிதலை பறைசாற்றுவதுடன் 'பன்முகப்படுத்தப்பட்ட சிறந்த தொழிலாளர் குழு' இற்கான சிறப்பு விருதையும் NOLIMIT பெற்றுக் கொண்டமை விசேட அம்சமாகும்.
இலங்கையின் சிறந்த 25 பணியகங்களுக்காக ஆய்வு, பெருமை, மதிப்பு, தோழமை, நம்பகத்தன்மை, நேர்மை ஆகிய ஐந்து பரிமாணங்களை கருத்திற் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு சிறந்த வேலைத்தளத்தின் உருவாக்கத்திற்கு இப்பரிமாணங்களுக்கு இடையிலான சமநிலைத் தன்மையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகின்றது.
இலங்கை Great Place to Work Institute இன் விசேட பிரிவு விருதுகளின் நோக்கம் குறிப்பிட்ட பிரிவுகளின் சிறப்புத்தன்மையை ஊக்குவிப்பதோடு சாதகமான தொழில் புரியும் சூழலை வழங்கும் வேலைத்தளங்களை அடையாளம் கண்டு அங்ககரித்து முன்னுதாரணமான தொழிற் கலாச்சாரங்கள் மூலம் தரத்தை உறுதிப்படுத்துவது ஆகும். 'பன்முகப்படுத்தப்பட்ட சிறந்த தொழிலாளர் குழு' இற்கான தெரிவு சமமான வாய்ப்பு வழங்கும் தொழில்தருனர், மத, நிதி, சமூக, சமய பின்புலங்களை கருதாது பணியமர்த்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கல் ஆகியவற்றின் அடிப்படையில் இடம்பெற்றது.
NOLIMIT அவர்களின் ஊழியர்களுக்கு பயிற்சி, திறன் அபிவிருத்தி ஆகியவற்றிற்கான வாய்ப்புக்களை வழங்குகின்றது. மேலும் இவ்விருது NOLIMIT ஊழியர்கள் முகாமைத்துவம் மீது கொண்டுள்ள நம்பிக்கை, வேலையின் மீதான ஆர்வம் மற்றும் குழு நம்பிக்கை ஆகியவற்றை பிரதிபலிக்கின்றது என்றார்.
18 minute ago
20 minute ago
48 minute ago
18 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
48 minute ago
18 Sep 2025