2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

செலிங்கோ காப்புறுதிதாரர்களுக்கு போனஸ்

Gavitha   / 2016 ஏப்ரல் 07 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலிங்கோ லைஃப் தமது வாடிக்கையாளர்களுடன் 2.9 பில்லியன் ரூபாயை போனஸாக பகிர்ந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தத் திட்டம் 300,000த்துக்கும் அதிகமான காப்புறுதிதாரர்களுக்கு நன்மை அளிக்கும். வருடாந்த போனஸ், பண்டிகை கால 'கேஷ் போனஸ்' என்பனவற்றை உள்ளடக்கியதாக இது அமையும் என கம்பனி அறிவித்துள்ளது.

செலிங்கோ லை‡ப்பின் வரலாற்றில் இவ்வாண்டு வழங்கப்படவுள்ள தொகை ஆகக்கூடிய போனஸ் தொகையாக அமையவுள்ளது. 2015 நிதி ஆண்டில் கம்பனி திரட்டிய ஆயுள் நிதி மிகை தொகையை அடிப்படையாகக் கொண்டே இது வழங்கப்படவுள்ளது. 2015 டிசெம்பரில் ஒரு காப்புறுதி கொள்கையைப் பெற்றுக் கொண்டவருக்கும் இந்தப் போனஸ் தொகை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். காப்புறுதி கொள்கை வழங்கப்பட்ட முதலாவது ஆண்டிலிருந்தே போனஸூம் வழங்கப்படும் என்ற கம்பனி கொள்கைக்கு இசைவாக இது வழங்கப்படவுள்ளது.

மொத்த போனஸ் தொகையான 2.9 பில்லியன் ரூபாய் உரிய முறையில் காப்புறுதிதாரர்களிடம் பகிரப்பட்டு உரிய தொகைக்கான சான்றிதழ் ஏப்ரல் மற்றும் மே மாத காலப்பகுpயில் உரியவர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

அத்தோடு இவர்களுள் சிலருக்கு தமது ஆயுள் காப்புறுதி தொகையை அதிகரித்துக் கொள்ளுமாறு அல்லது ஓய்வுகால கணக்கு தொகைகளை அதிகரித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் சிங்கப்பூர் சென்று வருவதற்கான ஒரு கட்டணப் பொதி அல்லது திறன்பேசி ஒன்றை வெல்லுவதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிட்டும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X