2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

செலான் டிக்கிரியின் சிறுவர் மாதக் கொண்டாட்டங்கள்

Gavitha   / 2016 ஒக்டோபர் 04 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் டிக்கிரி ஒக்டோபர் மாதம் முழுவதையும் சிறுவர் மாதமாக கொண்டாடவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு நாடெங்கிலுமுள்ள அதன் கிளைகளில் 100இற்கும் மேற்பட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்து சிறுவர்களுக்கு மறக்கமுடியாத நினைவுகளை உருவாக்க திடம்பூண்டுள்ளது.

இம்மாதத்தில் ஏற்கனவே உள்ள டிக்கிரி கணக்குகள் மற்றும் புதிய கணக்குகளில் ரூ.1500 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை வைப்பிலிடுவோருக்கு செலான் Smiley உண்டியல் ஒன்றை  பரிசாக வழங்கப்படும்.

பரிசுகள் கையிலிருப்பில் உள்ளவரை மாத்திரமே வழங்கப்படும். சிறுவர்களுக்கு உரித்தான கேளிக்கையுடனான மகிழ்ச்சிகரமான சூழலில் பெற்றோரின் உதவியுடன் செலான் டிக்கிரி அவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கின்றது. சிறுவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாரியளவு நன்மைகளைக் கொண்டுவரும் செலான் டிக்கிரி சேமிப்புக் கணக்கு பெறுமதி சேர்க்கும் முன்னணி சிறுவர் சேமிப்புக் கணக்காக விளங்குகிறது.   

சிறுவர் மாத கொண்டாட்டங்கள் பற்றி கருத்துத் தெரிவித்த செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் பிரத்தியேக வங்கியியல் பிரதி பொது முகாமையாளர் திலான் விஜயசேகேர, “சிறுவர்களின் மனங்களைப் புரிந்து கொண்டு மீண்டும் ஒருமுறை சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் மாதத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் வருடத்தில் ஒரு நாளைக்காட்டிலும் மாதம் முழுவதுமாக பெருமளவான சிறுவர்கள் கொண்டாட்டங்களில் பங்குபற்றும் வாய்ப்பை பெறுகின்றனர்.

எமது வலையமைப்பு ஊடாக நாம் சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளோம். இத்தேசத்தின் எதிர்காலமான சிறுவர்களை களியாட்டங்களில் பங்குபற்றுவது மட்டுமல்லாது செலான் டிக்கிரி ஊடாக சேமிப்புப் பழக்கத்தை கற்பிப்பதையும் வங்கி அதன் சமூகப் பொறுப்புணர்வுக் கடமையாக கருதுகிறது. சேமிப்பு என்னும் எண்ணக்கருவை அறிமுகப்படுத்தி அதனை நட்புறவான ரீதியில் ஊக்குவிப்பதன் மூலம் 25 வருடங்களாக நாம் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் மற்றும் குடும்பங்களை வலுவூட்டியுள்ளது.” என குறிப்பிட்டார்.   

வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் இந்நிகழ்வுகளை செலான் வங்கியின் ஒவ்வொரு கிளையும் தனக்கே உரித்தான வகையில் டிக்கிரி சந்தை, வினாவிடை போட்டி, கேளிக்கை நிகழ்வு, பட்டமேற்றல் திருவிழா, மஜிக் நிகழ்வு மற்றும் பல தரப்பட்ட தனித்துவமான நிகழ்வுகளை சிறுவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வுகள் அனைத்தும் சிறுவர்கள் மத்தியில் பல நினைவுகளைப் பதிவு செய்ய உதவுவதுடன் “அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கி” அதன் கிளைகளில் கணக்குகளை கொண்டுள்ள சிறுவர்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டு வரும் நோக்கில் ஒக்டோபர் மாதம் முழுவதும் மகிழ்ச்சியை கொண்டுவருகிறது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X