2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

செலான் வங்கி வரிக்குப் பின்னரான இலாபம் ரூ. 720 மில்லியன் ரூபாய்

Gavitha   / 2016 மே 17 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

செலான் வங்கி 2016 மார்ச் 31ஆம் திகதியன்று முடிவடைந்த 3 மாதங்களில் வருமான வரிக்குப் பின்னரான இலாபமாக ரூ. 720 மில்லியனை பெற்று, 2015ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பெற்றுக் கொண்ட ரூ. 691 மில்லியன் வரிக்குப் பின்னரான இலாபத்தை விட 4% அதிகரிப்பொன்றை பதிவு செய்ததன் மூலம் உறுதிமிக்க காலாண்டு செயற்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது.

2016 மார்ச் 31ஆம் திகதியன்று முடிவடைந்த 3 மாதங்களுக்கான தேறிய வட்டி வருமானம் ரூ. 2,805 மில்லியனில் இருந்து ரூ. 2,939 மில்லியனாக, 4% இனால் அதிகரித்தது. 2016இன் முதலாம் காலாண்டில் தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானமானது, ரூ. 562 மில்லியனில் இருந்து ரூ. 695 மில்லியனாக 23.6% இனால் அதிகரித்துள்ளது. கடந்த சில வருடங்களாக செலான் வங்கி அடையப் பெற்ற திடமான வளர்ச்சிப் போக்கின் ஒன்றுதிரண்ட தன்மையை வெளிப்படுத்துவதாக இது காணப்படுகி;ன்றது.

வர்த்தக நடவடிக்கையில் இருந்து கிடைக்கும் தேறிய ஆதாயங்கள் அதேபோல், நிதிக் கருவிகள் மற்றும் அந்நிய செலாவணியின்; மீது கிடைக்கப் பெறும் ஆதாயங்கள் மற்றும் ஏனைய வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கியதான வங்கியின் ஏனைய தொழிற்பாட்டு வருமானமானது, 2015 இல் ரூ. 401 மில்லியனில் இருந்து 2016 இன் முதலாம் காலாண்டில் 117% இனால் குறைவடைந்ததன் மூலம் ரூ. 68 மில்லியன் தேறிய நட்டத்தை பதிவு செய்தது. வட்டி வீதங்களில் மேல்நோக்கிய நகர்வொன்று காணப்பட்டதன் காரணமாக உருவான அரச பிணையங்களின் மீதான 'சந்தை விலைச் சீராக்க நட்டங்களின்' (Mark- to-market losses) விளைவாக இவ்வாறு தொழிற்பாட்டு வருமானம் வீழ்ச்சியடைந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X