2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகள்

Gavitha   / 2016 செப்டெம்பர் 20 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூகத்துக்காக தனது கடமையை நிறைவேற்றும் செயற்பாடுகளை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக ‘யூனியன் மனிதாபிமானம்’ நிகழ்ச்சித்திட்டத்தினூடாக மற்றும் பல சமூகப்பொறுப்புணர்வு நடவடிக்கைகள் கடந்த 6 மாதங்களில் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.  

டெங்கு தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய மட்டத்திலான நிகழ்ச்சிகள் 2016 ஓகஸ்ட் 6ஆம் திகதி நாடெங்கிலும் முன்னெடுக்கப்பட்டது. யூனியன் அஷ்யூரன்ஸ் துறைசார்ந்த ஊழியர் குழுவினர் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளின் காரியாலயங்களின் பங்களிப்புடன் நாடு முழுவதையும் சேர்ந்த மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவது இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் இலக்காகும். யூனியன் அஷ்யூரன்ஸ் கிளைகளிலிருந்து 1 - 2 கிலோமீற்றர் தூரத்தினுள் காணப்படும் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் இந்த விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.   

இதற்காக, 4000க்கும் அதிகமான நபர்கள் தன்னார்வ அடிப்படையில் இணைந்திருந்ததுடன், இனங்காணப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இதற்காக ஒரு நாளில் நாடு முழுவதிலும் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகள் 61 ஐ முன்னெடுப்பதற்கு முடிந்திருந்ததுடன், அந்த சகல நிகழ்ச்சிகளும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.  

கொழும்பு மாநகர சபையின், பொது சுகாதார திணைக்களத்தின் பிரதம மருத்துவ அதிகாரி வைத்தியர். ருவன் விஜயமுனி கருத்துதெரிவிக்கையில், ‘பல ஆண்டுகளாக யூனியன் அஷ்யூரன்ஸ் உடன் பொது சுகாதார திணைக்களம் செயலாற்றியுள்ளது. தனியார் நிறுவனம் எனும் வகையில், எமது டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகளுக்கு அவர்கள் பெருமளவு ஆதரவை வழங்கி வருகின்றனர். டெங்கு நோய் ஒழிப்பு செயற்பாடுகளில் அவர்களின் ஈடுபாடு மிகவும் வரவேற்கத்தக்கது’ என்றார்.  

தேசிய தலசீமியா நிலையத்தின் ஆலோசகரான குழந்தை நோய் விசேட மருத்துவ நிபுணர் வைத்திய நிலாம் கருத்துத் தெரிவிக்கையில், ‘தலசீமியா நோய் தொடர்பில் அறிந்திருப்பதனூடாக அதை தவிர்த்துக்கொள்ள முடியும். இது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் பங்களிப்பு வரவேற்கத்தக்கது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது தலசீமியா நோய் குறைந்து செல்வதாக அறிக்கைகளிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. இது வரவேற்கத்தக்க விடயமாகும்’ என்றார்.  

இதற்கு மேலதிகமாக, நாட்டில் பரவாத நோய்களில் மக்கள் மத்தியில் பெருமளவு சவாலாக காணப்படுவது நீரிழிவு நோயாகும். இது தொடர்பிலும் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டுவதற்கு யூனியன் அஷ்யூரன்ஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் கீழ், நீரிழிவு அபாயகர நிலை உள்ளதா என்பதை பரிசோதித்துக்கொள்துக்கு விசேட சுகாதார பட்டறைகள் 2 ஐ ஏற்பாடு செய்திருந்தது. அதனூடாக 178 பேர் வரை விழிப்புணர்வுக்குட்படுத்தப்பட்டிருந்தனர். நீரிழிவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படும் 57 பேரும் இனங்காணப்பட்டிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X