2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

சம்பத் e-ரெமிட்டன்ஸ் காஷ் வாசி 3 பூர்த்தி

Gavitha   / 2016 மார்ச் 14 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பத் e-ரெமிற்ரன்ஸ் அண்மையில் அதன் விற்பனை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டமான காஷ் வாசி 3இன் பரிசளிப்பு நிகழ்வை கொழும்பு 2, சேர் லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையிலுள்ள வங்கித் தலைமை அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் முன்னெடுத்திருந்தது.

சம்பத் வங்கி காஷ் வாசி 3 நிகழ்ச்சித்திட்டத்தை 2015 செப்டெம்பர் 1ஆம் திகதி ஆரம்பித்திருந்தது. சம்பத் e-ரெமிட்டன்ஸ் வாடிக்கையாளர்கள் மில்லியன் ரூபாய் வரையிலான ஏராளமான பணப்பரிசுகளையும் ஏனைய பரிசுகளையும் வென்றிருந்தனர்.

காஷ் வாசி 3 நிகழ்ச்சித் திட்டத்தின் முதற் பரிசாகிய ஒரு மில்லியன் ரூபாய், பெல்லன்விலவைச் சேர்ந்த சமீர தர்ஷன திசாநாயக்க என்பவருக்குக் கிடைத்துள்ளது. ஒரு வர்த்தகரான திசாநாயக்க சம்பத் e-ரெமிற்ரன்ஸ் வசதிகளை பயன்படுத்த சுமார் பத்து ஆண்டுகளாக இத்தாலியிலுள்ள அவரது நண்பர் அனுப்பி வந்த பணத்தை பெற்றிருந்தார். தான் காஷ் வாசி 3 வாயிலாக வென்றெடுத்துள்ள ஒரு மில்லியன் ரூபாய் தனது வாழ்க்கையையே மாற்றிவிட்டதாக திசாநாயக்க தெரிவித்தார்.

ஒரு இலட்சம் ரூபாய் பணப்பரிசை சம்பத் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட அதிர்ஷ்டசாலிகளான மூன்று வெற்றியாளர்கள் ஹேமந்த சோமசிறி, சரோஜா மயில்வாகனம், பீ.என். கனகரத்ன ஆகியோரவார். மேலும் LED தொலைக்காட்சிகள் ஐந்து, ஹோம் தியேட்டர்கள் பத்து, சலவை இயந்திரங்கள் மூன்று, Hi Fi ஸ்டீரியோ தொகுதிகள் பத்து, குளிர்சாதனப் பெட்டிகள் இரண்டு என்பவற்றையும் ஆறுதல் பரிசுகளாக சம்பத் வங்கி வழங்கியிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X