2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சம்பத் வங்கியின் 'லீசிங் வாசி துன் மாசே'

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பத் வங்கி, சௌகர்யமான லீசிங் தீர்வுகளைத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது. அவ்வங்கி, தனது வருடாந்த 'லீசிங் வாசி துன் மாசே' (மூன்று மாதங்களுக்கு லீசிங் அனுகூலங்கள்) எனும் நடமாடும் சந்தையை நாடு முழுவதிலும் முன்னெடுத்து வருகிறது.  2016 ஆம் ஆண்டுக்கான நடமாடும் லீசிங் காலாண்டு சந்தையின் மூலமாக, வாடிக்கையாளர்களுக்கு சௌகர்யமான முறையில் வாகனமொன்றை லீசிங் முறையில் கொள்வனவு செய்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதிலும் சம்பத் வங்கி 10 நடமாடும் லீசிங் சந்தைகளை முன்னெடுத்திருந்தது, இதில் ஐந்து மாபெரும் லீசிங் சந்தைகளை மஹாரகம, கிரிபத்கொட, கண்டி, காலி மற்றும் நீர்கொழும்பு ஆகிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. மேலும் ஐந்து நிலையான நடமாடும் சந்தைகள் ஹட்டன் நெல்லியடி, மொரவக, கம்பஹா மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் நடைபெற்றன. இந்த சந்தைகளில் பெருமளவான வாடிக்கையாளர்கள் மற்றும் வாகன விற்பனையாளர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

2016 ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் 31 வரையில் நடைபெறும், இந்த ஆண்டு லீசிங் காலாண்டில், சம்பத் லீசிங் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு, சம்பத் கடன் அட்டைக்கு வாடிக்கையாளர்கள் இணைவுக்கட்டணம் மற்றும் முதல் ஆண்டுக்கான வருடாந்த கட்டணமின்றி விண்ணப்பிக்க முடியும்.

மேலும், வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொண்ட சம்பத் கடன் அட்டையைக் கொண்டு, 0மூ வட்டியில்லாத தவணைக்  கட்டணத்தில் வாகனக் காப்புறுதி தவணைக்கட்டணங்களை செலுத்த முடியும். நாடு முழுவதுமுள்ள சம்பத் வங்கி கிளைக்கு வாடிக்கையாளர்கள் விஜயம் செய்து, ஆகக்குறைந்த ஆவணங்களை சமர்ப்பித்து, இந்த விசேட திட்டத்தின் அனுகூலங்களை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும்.

சம்பத் லீசிங் அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், பெருமளவு தெரிவுகள் மற்றும் சௌகர்யம் ஆகியன காரணமாக அதிகளவு வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், பிரத்தியேகமான கொடுப்பனவு முறைகள், வாடிக்கையாளர்களுக்கு சௌகர்யத்தை ஏற்படுத்தல் போன்றனவும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு வாடிக்கையாளர்களினதும் இயலுமைகளைப் பிரத்தியேகமான முறையில் சம்பத் வங்கி கண்டறிகிறது. அதன் அடிப்படையில் தனது சேவை வழங்கல்களை மாற்றியமைத்து வழங்கி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X