Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 18 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் பிஎல்சி தனது குருதிப்புற்றுநோய் நோயாளர் சிகிச்சை நிலையத்தில் Multidisciplinary Team (MDT) Meeting கட்டமைப்பை அறிமுகம் செய்துள்ளது. பிரித்தானியாவில் காணப்படும் புற்றுநோய் வைத்தியசாலைகள் நிலையங்களில் பின்பற்றப்படும் நியம செயன்முறையாக இது அமைந்துள்ளது.
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் குருதிப்புற்றுநோய் பிரிவில் சிகிச்சையை நாடும் ஒவ்வொரு நோயாளரினதும் அல்லது மஹாரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையிலிருந்து MDT கருத்தாய்வுக்காக அனுப்பப்படும் ஒவ்வொரு நபர்களுடனான MDT meetingகளில் Heamatologist Heamato-Oncologist வைத்திய ஆலோசகர் வைத்தியர். சமன் ஹேவமான (MD,MRCP, FRCP, MRCPath, FRCPath, PhD, CCT) பங்குபற்றுவார்.
குருதிப்புற்றுநோய் தொடர்பில் (blood cancer) பெருமளவான ஆய்வுப்பிரசுரங்களை மருத்துவத்துறையில் முன்னெடுத்துள்ள அனுபவத்தை வைத்தியர். ஹேவமான கொண்டுள்ளார். ஐரோப்பாவின் மாபெரும் புற்றுநோய் மருத்தவநிலையமான றோயல் மார்ஸ்டென் வைத்தியசாலையிலும், பிரித்தானியாவின், புற்றுநோய் ஆய்வு கல்வியகம் ஆகியவற்றிலும் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். லங்கா ஹொஸ்பிட்டல்ஸின் MDT for hematological malignancies இன் தலைவராக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவரின் அணியைச் சேர்ந்தவர்கள் தனியார் துறையில் புகழ்பெற்ற Oncologistகளாக திகழ்கின்றனர். மேலும் மஹாரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் பணியாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வைத்தியர். ஹேவமான கருத்துத் தெரிவிக்கையில், ‘வௌ;வேறு பிரவுகளில் புலமை பெற்ற சுகாதாரத்துறை சார்ந்த அணியினராக இந்த அணி திகழ்கிறது. (இதில் Oncologists, Clinical Haematologists, Pathologists, Surgeons, Cardiologists, nursing staff, Pharmacists, Psychiatrists, Social Workers, junior doctors போன்றவர்கள் அடங்கியுள்ளனர்). நோயாளி கொண்டிருக்கக்கூடிய நோய் தொடர்பில் அணி அங்கத்தவர்கள் சுயாதீனமாக வௌ;வேறு ஆய்வுகளை முன்னெடுப்பார்கள். முதல் தடவையாக, லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், தற்போது சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, பின்பற்றப்படும் நோயாளர் சிகிச்சைக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது’ என்றார்.
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் தலைவர் வைத்தியர்.சரத் பரணவிதான கருத்துத் தெரிவிக்கையில், ‘புற்றுநோயாளர்கள் மத்தியில் நோய் நிலைகளை இனங்காண்பதற்காக நாம் தற்போது லங்கா ஹொஸ்பிட்டல்ஸில் (MDT) Meetingகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறோம்.
எதிர்காலத்தில் Oncology நோயாளர்களுக்கான பரிசோதனைகளை பொதுவாக முன்னெடுக்கவுள்ளோம்.
இந்த சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டமைப்பு, பிரித்தானியாவின்,NHS இல் பாவனையிலுள்ளதுடன், சந்திப்பின் போது ஆகக்குறைந்த பங்குபற்றுநர்கள், தலைமைத்துவம், தலைவரின் பொறுப்புகள், வெற்றிகரமான செயலாற்றும் அணியின் பணியாற்றும் கலாசாரம், சந்திப்புகளை ஏற்பாடு செய்தல், சந்திப்பின் போது ஒழுங்குபடுத்தல்கள், சந்திப்பின் பின்னரான செயற்பாடுகள் போன்றன உள்நாட்டு நோயாளர்களுக்கு பெருமளவு அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும்’ என்றார்.
44 minute ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
4 hours ago
5 hours ago
6 hours ago