2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

சுகாதார அமைச்சுக்கு vivo முகக்கவசங்களை நன்கொடையளிப்பு

Editorial   / 2020 மே 14 , மு.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

COVID-19 தொற்று நிலையை எதிர்கொள்ளும் முகமாக vivo, ரூ. 1 மில்லியன் பெறுமதியான பாதுகாப்பு முகக்கவசங்களை இலங்கை சுகாதார அமைச்சிடம் கையளித்தது.

vivoவின் #vivocare முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நன்கொடை வழங்கப்பட்டது. கடும் சிரமங்களுக்கு மத்தியில் நோய்த்தொற்றை தடுப்பதற்காக அயராது பணியாற்றும் சுகாதாரத் துறை பணியாளர்களுக்காக 15,000 முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. சுகாதாரத்துறை பணியாளர்களை பாதுகாப்பதன் அவசியத்தை vivo Mobile Lanka நன்கு புரிந்து கொண்டுள்ளமையால், இந்த பராமரிப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முகமாக விசேட முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்த பாதுகாப்பு முகக்கவச தொகையானது சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம், vivo Mobile Lankaவின் பணிப்பாளர் எலிசன் ஜின்னினால், அமைச்சக வளாகத்தில் வைத்து அண்மையில் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X