Editorial / 2020 ஜூன் 17 , மு.ப. 06:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள, யாழ்ப்பாணம் ஆகிய சர்வதேச விமான நிலையங்களின் செயற்பாடுகளை, ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் மீள ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரிக்கும் என, சுற்றுலா, தொழிற்றுறை சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம். ஜவ்பர் தெரிவித்தார்.
இவ்வாறு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை, சுகாதார அதிகார அமைப்புகளின் வழிகாட்டல்களுக்கு அமைய வரவேற்பதற்கு, உள்நாட்டு ஹோட்டல்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். சுகாதார அமைச்சால், அறுகம்பே பகுதியில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பான பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுகாதார அதிகார அமைப்புகள், பாதுகாப்புப் படையினர், அரசாங்க அதிகாரிகள், பொது மக்களின் பங்களிப்புடன் அறுகம்பே பகுதி, கொரோனா வைரஸின் பாதிப்புக்கு உட்படாத பகுதியாக அமைந்துள்ளது. இந்தச் சூழலைத் தொடர்ந்தும் பேணுவதற்குச் சுகாதார அமைப்பால் வழங்கப்படும் வழிகாட்டல்களைச் சகல ஹோட்டல்களும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.
கொவிட்-19இன் பாதிப்பால், இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹோட்டல் துறையினர், எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு ஏற்கெனவே விளக்கமளித்துள்ளதாக அவர் கூறினார்.
துறையைத் தொடர்ந்து செயல்நிலையில் பேணுவதற்காக, அரசாங்கம் குறைந்த வட்டியில் கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவும் வெளிநாடுகளில் சுற்றுலா ஊக்குவிப்பு பிரசார செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
அம்பாறை பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.எம்.ஏ.பி. ஹேரத்திடம் பிரதேசத்தின் ஹோட்டல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஆலோசனை வழங்குமாறு கோரியிருந்ததுடன், இந்தப் பயிற்சிப் பட்டறையை முன்னெடுப்பதற்கு அவசியமான ஏற்பாடுகளை, கல்முனை சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர் மேற்கொண்டிருந்தார்.
40 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago