Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 26 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலான் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பரிபூரண வங்கியியல் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் தனது வியாபார சார் வாடிக்கையாளர்களுக்காக முன்னுரிமை அடிப்படையிலான சேவைகளை வழங்கும் கவுன்டரை அறிமுகம் செய்துள்ளது.
வங்கியினூடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இச்சேவை, புதிய கவுன்டர் முறையினூடாக துரிதமாக முன்னுரிமை அடிப்படையில் ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. முதற்படிமுறையாக, தெரிவு செய்யப்பட்ட 50 வாடிக்கையாளர்களின் தினசரி வியாபார செயற்பாடுகள் இந்த முன்னுரிமை கவுன்டர்களினூடாக மேற்கொள்ளப்படும்.
மேலும், வாடிக்கையாளர்கள் வங்கியினால் தமக்கு வழங்கப்படும் வியாபார லோயல்டி அட்டையை சமர்ப்பித்து இந்த முன்னுரிமை கவுன்டர் சேவையை பெற்றுக் கொள்ள முடியும். மேலும், இந்த வியாபார லோயல்டி அட்டையில் இணைந்துள்ள ஏனைய அனுகூலங்களாக செலான் பிரத்தியேக மற்றும் வீடமைப்புக் கடன்கள் மீது விசேட சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், செலான் கடன் அட்டைகள் மீது முதலாம் ஆண்டுக்கான வருடாந்தக் கட்டணம் மற்றும் இணைவுக் கட்டணம் போன்றன விலக்கழிக்கப்படும்.
சிறிய, நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மை மற்றும் கூட்டாண்மை துறைகளுக்கு சிறந்த மேம்படுத்திய சேவைகளை வழங்குவதற்காக கடந்த காலங்களில் செலான் வியாபார சேவைகள் பிரிவினூடாக விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. செலான் வங்கியின் வியாபார சேவைகளினூடாக வெவ்வேறு வகையான வசதிகள் வழங்கப்படுகின்றன.
இதில் கட்டமைப்பு வசதிகள், Letters of Credit வழங்கல், Export Letters of Credit தொடர்பான ஆலோசனை மற்றும் பேரம் பேசல்களை மேற்கொள்ளல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களில் வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்தல் போன்றன முன்னெடுக்கப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
2 hours ago