Freelancer / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலிங்கோ லைஃப், அண்மையில் ஷங்ரி-லா ஹம்பாந்தோட்டையில் 'குறிக்கோள்-சிறப்பை நோக்கி உயர்தல்' எனும் கருப்பொருளில் நடத்திய 2025 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு விருது வழங்கும் நிகழ்வில், தனது விற்பனை அணியில் சிறப்பாக பணியாற்றியவர்களை கௌரவித்தது.
இந்தக் கொண்டாட்டத்தில், வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சிறப்பாகச் செயல்பட்ட 215 விற்பனை அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டனர், மேலும் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவத்தினர் உட்பட மொத்தம் 300 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக, உல்லாச விடுதியில் இலவசமாக இரவு தங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டமையானது நிகழ்வின் கொண்டாட்ட சூழலை மேம்படுத்தியது.
இந்த நிகழ்வில் செலிங்கோ லைஃப்பின் தலைவர் ஆர். ரெங்கநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
சிறந்த கிளைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வட பிராந்தியத்தைச் சேர்ந்த கே.பகீரதன்;, சிறந்த பிரிவுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வட பிராந்தியத்தைச் சேர்ந்த திருமதி.எஸ்.ராகினி,; சிறந்த ஆயுள் காப்புறுதி ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்குப் பிராந்தியத்தைச் சேர்ந்த ஏ.ஐ. பி.மஞ்சுள, சிறந்த பிராந்திய விற்பனை முகாமையாளராக அங்கீகரிக்கப்பட்ட கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த திருமதி.ஜே.மீரா ஆகியோர் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
செலிங்கோ லைஃப்பின் வருடாந்த நாட்காட்டியில், அரையாண்டு விருது வழங்கும் விழாவானது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாறியுள்ளது. இந்நிகழ்வானது விற்பனை அணியினரின் சாதனைகளைக் கொண்டாடவும், ஆண்டு இறுதியை நோக்கி அவர்கள் முன்னேறும்போது இன்னும் சாதனை இலக்குகளை அடைவதற்காக அவர்களை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1 hours ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025