2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

செலிங்கோ லைஃப் வென்டிலேற்றர்களை அன்பளிப்பு

Editorial   / 2020 மே 07 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளோருக்கான சிகிச்சைகளை வழங்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில், உயர்தரத்திலானதும் நோயாளிகளுக்குச் சிரமத்தை வழங்காததுமான இரண்டு வென்டிலேற்றர்களை (செயற்கை மூச்சுக்கருவி அல்லது ventilator), செலிங்கோ லைஃப் அன்பளிப்பு செய்திருந்தது.

Resmed Stellar 100 வகையிலான இந்த இரண்டு வென்டிலேற்றர்களும் அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதோடு, இலங்கையில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம், இராணுவத் தலைமையகத்தின் வைத்து அண்மையில் கையளிக்கப்பட்டன.

அரச மருத்துவ நிறுவனங்களுக்கு செலிங்கோ லைஃப் நிறுவனத்தால் அத்தியாவசிய உபகரணங்களும் உட்கட்டமைப்பு வசதிகளும் வழங்கப்படுவதன் தொடர்ச்சியான ஒரு விடயமாகவே இவ்வன்பளிப்பும் அமைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X